அரசியல்

Friday, October 30, 2015

”எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!” அண்ணா சொன்னதில்லை! வேறு யார் சொன்னது?


எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற சொற்றொடர் அண்ணாவால் சொல்லப்பட்டது என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறே கூறவும் எழுதவுஞ் செய்கின்றனர். ஆனால் அது சரியல்ல.
உண்மையில் இச்சொற்றொடரைக் கூறியவர்,
பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன் என்பவர் ஆவார். இவர் பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸிற்கு புறப்படுவதற்கு முன் “டோவர்”
துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் புறப்பட்டபோது இக்கருத்தைக் கூறுகிறார்.
”என்னை நேசிப்பார்க்கு ஒரு பெருமூச்சு
என்னை வெறுப்பார்க்கு ஒரு புன்முறுவல்
என்ன வந்தாலும் சரியே
எதையுந் தாங்கும் இதயம் உண்டு”
என்ற கூறிவிட்டு பிரான்ஸிற்கு விடைபெறுகிறார். அப்போது கூறப்பட்டதே “எதையும் தாங்கும் இதயம்” என்ற சொற்றொடர். அண்ணா கூறியதாகச் சொல்வது தவறாகும். அண்ணா இதை எடுத்தாண்டார்.

No comments:

Post a Comment