அரசியல்

Wednesday, February 21, 2018

தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலராக தேர்வாகியுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Image may contain: 1 person

=============================
எங்கள் குடும்ப நண்பர். வாலிபப் பருவம் தொட்டு நான் அவரையும், அவர் எளிமையையும், உழைப்பையும் நன்கு அறிவேன்!
நல்ல பேச்சாளர். ஒரே கொள்கையில் உறுதியுடன் நிற்பவர். அடிமட்ட தொண்டர் நிலையிலிருந்து தனது அளப்பரிய உழைப்பால், தியாகத்தால், கட்டுப்பாட்டால், கட்சிப் பணிகளால் படிப்படியாய் உயர்வு பெற்று இன்று மிக உயர் நிலையைப் பெற்றுள்ளனர்.
இவரது தூயத் தொண்டால், துவளாத உறுதியால் அவரது இயக்கமும், தமிழகமும் வளமும், பலமும் பெற வாழ்த்துகிறேன்.
அவர் உயர்வைப் பாராட்டுகிறேன்.
வாழ்க பல்லாண்டு!
- அன்புடன்,
- மஞ்சை வசந்தன்,
20.02.2018

இதுதான் சீமான் தமிழ்த்தேசியமா?

Image may contain: 1 person, text
”கலைஞர் தமிழர் இல்லை, மண்ணின் மைந்தர் இல்லை!
ஆனால்,
கமலகாசன் மண்ணின் மைந்தர்; தமிழர்!"
இதுதான் சீமான் பேசும் தமிழ்த் தேசியம்!
காவடித் தூக்கி தமிழ் மரபை மீட்கப் போகிறேன் என்கிறார்!
பார்ப்பனர்களைத் தமிழர் என்கிறார்.
வை.கோ. தமிழன் இல்லை என்கிறார்.
ஆனால், சேரன், சோழன், பாண்டியன் என் முப்பாட்டன் என்கிறார்.
அந்த சேரன்தானே இன்றைய மலையாளி.
அன்றைக்குத் தமிழ் பேசியவர்கள்தானே இன்றைக்கு மலையாளம் பேசுகின்றனர்.
மொழி மாறியதால் இனம் மாறுமா?
ஆரிய பார்ப்பான் தமிழ் பேசுவதால் தமிழன் ஆக முடியுமா?
நாம் தமிழர் கட்சி வியன் அரசு கமலை ஏற்க முடியாது என்கிறார். ஆனால், சீமான் ஏற்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொள்கைதான் என்ன? அங்கே பல பிரிவுகளா? சீமானுக்கம் வியன் அரசுவிற்கும் கருத்து மோதலா?
அரசியல் நடத்துவதற்காக திராவிடத்தை எதிர்ப்பது ஆரியத்திற்கு அடிமை சேவகம் செய்வதற்குச் சமம்.
காவிரிப் பிரச்சினையைக் காட்டி கர்நாடக எதிர்ப்பு செய்தார். அது பங்காளி சண்டை என்று நாம் சொன்னதை ஏற்கவில்லை. பார்ப்பன எதிர்ப்பு இனமோதல், பண்பாட்டு மோதல், கலாச்சார மோதல் என்றோம். ஆனால், அதை சீமான் ஏற்கவில்லை. இப்போது உச்சநிதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டது. இனி சீமான் என்ன செய்யப் போகிறார். கர்நாடக அணையை உடைக்கப் போகிறாரா?
உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்குள் வரப்புச் சண்டை வருகிறது. அதற்காக அண்ணன் தம்பி உறவு அற்று விடுமா?
தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியினர் நன்கு சிந்திக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியினர் நமக்கு எதிரிகள் அல்ல.
அவர்கள் தங்களைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றைச் சொல்கிறோம்!

Tuesday, February 20, 2018

கமல்ஹாசனும் இரஜினிகாந்தும் மின்னலைக் கண்டு விதை விதைக்கிறார்கள்!

21.02.2018


மின்னலைக் கண்டு விதை விதைக்காதே!" என்று
கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு.

மின்னல் பலமாக மின்னியதும் மழை வந்துவிட்டதாக எண்ணி விதை விதைப்பது எவ்வளவு பெரிய அறியாமையோ அவ்வளவு பெரிய அறியாமை கமலகாசனும் இரஜினிகாந்தும் சினிமா செல்வாக்கை நம்பி அரசியலுக்கு வருவது, கட்சி ஆரம்பிப்பது!

இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளுக்கு தீனி போடலாம்; அவர்களும் தூக்கிப் பிடித்துப் பிழைக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மிகச் சரியாக முடிவு எடுப்பார்கள்!

இவர்கள் உண்மையில் தமிழர்களுக்கானவர்கள், தமிழர்களின் நலத்துக்கானவர்கள் என்றால், கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும். ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

இப்போது சூழலைப் பயன்படுத்தி பதவிக்கு வரத் துடிக்கிறார்கள்!

அப்பாவித் தமிழர்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.


===

உங்களுக்குத் தெரியுமா? இதோ ஓர் உன்னதத் தமிழர்!


Image may contain: 2 people, people standing, mountain, sky, ocean, beard, outdoor, nature and water
============================
மேட்டூர் அணை கட்ட அரிய பணி செய்த அத்தமிழர் வறுமையில் வாடுகிறார்!
அவருக்குக்கூட உதவாத தமிழக அரசு!
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையாக திகழ்கிறது மேட்டூர். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த அணையை நம்பித்தான் காவிரி டெல்டா மாவட்ட விவசாயமே உள்ளது.
மேட்டூர் அணை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்டாலும் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நமது தமிழர்கள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப் பெரும் பங்காற்றியவர்களில் ஒருவர் ஆங்கிலப் பொறியாளர் எல்லீஸ். இவருக்கு மேட்டூர் அணை கட்ட பலர் உதவியாளர்களாக இருந்தாலும் பொறியாளர் எல்லீசுக்கு பெரும் உதவியாளராக விளங்கியவர் பி.ஆர்.கண்ணப்பன். இவர் தற்போது ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
105 வயதை எட்டியுள்ள அவர் மேட்டூர் அணைக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடங்கியதில் இருந்து அணை கட்டி முடிக்கும் வரை தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
அணை கட்டி முடிக்கப்பட்டு 1943 ஆம் ஆண்டு திறப்பு விழாவின் போது சிறப்பாக அணை கட்டப் பணியாற்றிய கண்ணப்பனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புனல் மின் நிலையத்தில் பணி புரிய பணி நியமன ஆணையையும் பொறியாளர் எல்லீஸ் வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கடந்த 21.11.2012 ஆம் ஆண்டு கண்ணப்பன் தனது 100 ஆவது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். தற்போது வயது 105.
ஆங்கிலேயர் காலத்தில் உதவியாளராகப் பணியில்
சேர்ந்த ஒரே காரணத்திற்காக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய எந்தப் பணிப் பலன்களும் இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை.
பணியில் இருந்த போது 1947 ஆம் ஆண்டு ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தான் வசிப்பதற்காக வாங்கிய வீட்டை இப்போது விற்று பெரியார் நகரிலேயே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கண்ணப்பன் கூறுகையில், “ தற்போது 105 வயதாகும் நான் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். மேட்டூர் அணை கட்டப் பாடுபட்ட எனக்கு சொந்த வீடு கூட இல்லை. அரசிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு அரசு சார்பில் ஏதாவது உதவி செய்தால் என் கடைசி காலத்தை இப்படியே ஓட்டி விடுவேன்’’ என்றார்.
இப்படிப்பட்ட தமிழர்களை மறந்த இன்றைய தமிழர்கள், நடிகர்களை தலைவனாகக் கொண்டாடுவது அவலம் அவமானம்!
தமிழர்க்கு உழைத்துவரும் தகுதியான தமிழர்களைப் போற்றுங்கள் தலைவராகக் கொள்ளுங்கள். அதுதான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியைத் தரும்.
தமிழர்கள் குறிப்பாக அயல்நாடுகளில் வேலையில் உள்ள தமிழர்கள் இவருக்கு உதவி அவர் ஏக்கத்தைப் போக்கலாம்.
"பி.ஆர்.கண்ணப்பன், பெரியார் நகர், ஈரோடு"
என்ற முகவரிக்கு காசோலை அனுப்பலாம்!
அவருடைய வங்கி எண் :
P.R.KANNAPPAN.
K. DHANAM
IOB PERIYAR NAGAR
CODE 0834
A/C NO : 083401000021592
IFSC : IOBA0000834

சிறுமி ஹாசினி கொலை வழக்கு! மகளிர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது!

சிறுமி ஹாசினி கொலை வழக்கு!
மகளிர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது!
மனித நேயத்தின் மலர்ச்சி!
============================
Image may contain: 2 people, people smiling, outdoor

கொடுங்குற்றவாளிகள், அதுவும் குழந்தையைக் கொல்லும் குற்றவாளிகள் இப்படித்தான் தண்டிக்கப்பட வேண்டும்!

மனித உரிமை என்பதெல்லாம் கொடுங்குற்றவாளிகளுக்குப் பொருந்தாது!
பாதிக்கப்பட்டவர் நிலையிலிருந்து பார்த்து மனிதம்
பேச வேண்டும்!

" கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்."

கொடியவர்களை அரசு (நீதிமன்றம்) கொலை செய்து தண்டிப்பது பயிருக்கு களையெடுப்பதைப் போன்றது என்றார். வள்ளுவர் வாக்கே சரியானது!

கொடியவர்கள் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் இதுபோல் விரைந்து நீதி வழங்க வேண்டும். அப்போதுதான் கொடுமைகள் குறையும்!



மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Tuesday, February 6, 2018

எனது பிறந்த நாள் செய்தி


இன்று எனது பிறந்த நாள்


எல்லோருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அனைவரும் நலமும், வளமும், மானமும், உரிமையும், சமவாய்ப்பும் பெற்று, மனிதநேய கொள்கையுடன் ஒருவருக்கொருவர் உதவி ஒன்றுசேர்ந்து வாழ வேண்டுகிறேன்.

வாழ்வித்து வாழ்வோம்!
என்பதே உலக மக்களுக்கு நான் கூறும் வாழ்க்கை நெறி!

மக்களை நேசித்து, மக்களுக்கு உதவி, வாழ்வித்து வாழ்வோம் என்று வாழ்ந்தோம் என்றால், கடவுள், மதம், சாதி, இனம் போன்ற மதிற்சுவர்களுக்கு தேவையேயில்லை!

கடவுளுக்கு கோயில், விழா, படையல் என்பது கடவுள் கொள்கைக்கே எதிரானது|

கடவுளுக்கு செய்ய மக்கள் யார்? சிந்திக்க வேண்டாமா?

கடவுளுக்குத் தொண்டு என்பதே கையூட்டு முயற்சிதானே!

கடவுள் இவற்றை எதிர்பார்ப்பதாய் மனிதன் நம்புவதுதான் முதன்மையான மூடத்தனம்!

கடவுளை மக்கள் ஏற்பது என்பது சரியல்ல. கடவுள் மக்களை ஏற்கும்படி நடக்க வேண்டும் என்பதே கடவுள் கொள்கையின் அடிப்படை. இந்த அடிப்படை புரிந்தால் கடவுள் நம்பிக்கையோ, அதுசார்ந்த மற்ற செயல்பாடுகளோ அர்த்தமற்றவை என்பதும் அவை கடவுள் கொள்கைக்கு எதிரானவை என்பதும் எளிதில் விளங்கும்!

நான் தமிழர்களுக்கும், இந்திய அளவில் வாழும் ஆரிய பார்ப்பனர் அல்லாதாருக்கும் விடுக்கும் வேண்டுகோள்:

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காட்டிய நெறியும், ஊட்டிய உணர்வுகளுமே இந்த மண்ணிற்கு ஏற்றவை! அவற்றைப் பின்பற்றுவதே நமக்கு உயர்வளிக்கும்! ஆதிக்கவாதிகளை அடக்கி ஒடுக்கும்!

பி.ஜே.பி. ஆட்சியை அகற்ற இப்போதே ஒன்று சேருங்கள். அதற்கான பரப்புரையை, செயல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்!

தமிழகத்தில் அ.தி.மு.க. அடிமை ஆட்சியை அப்புறப்படுத்துங்கள்.

தமிழ்த் தேசியவாதிகள், இடதுசாரிகள், மதச்சார்பற்ற கொள்கையில் பற்றுள்ளவர்கள், திராவிட எதிர் விமர்சனத்தைக் கைவிட்டு, தி.மு.கழகத்தின் குறைகளை நீக்க வலியுறுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி, அவர்கள் எவ்வித தவறும் செய்யாமல் கண்காணித்து, தமிழர், தமிழ்நாடு, நலன் சார்ந்த, உரிமை மீட்கும், ஆட்சி நடக்கவும், விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், பெருகவும் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். அப்போது, தி.மு.க. ஆட்சி உங்களுக்கு நிறைவளிக்காமல் போனால், அதற்கு அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

மாறாக, வரவுள்ள சட்டமன்றத் தேர்தலிலே ஒருவருக்கொருவர் விமர்சித்து, வாக்குகளைச் சிதைத்து, பி.ஜே.பி.யின் பினாமியான இரஜினி போன்றோர் தலைதூக்கவோ, பி.ஜே.பி. காலூன்றவோ காரணமாக அமையாதீர்கள்!

மக்கள் நலக் கூட்டணி அமைத்து தி.மு.க.வை சென்ற தேர்தலில் தோல்விவுறச் செய்ததன் பாதக விளைவுகளை இப்போது தமிழகம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு வரலாற்றுத் தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம்.

இவற்றை தி.மு.க. சார்பான கருத்தாகக் கொள்ளாமல், தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த சரியான முடிவாகக் கொள்ளுங்கள்!

நமக்குள் இருக்கும் முரண்பாட்டால் எதிரிகள் காலூன்றவோ, ஆட்சியில் அமரவோ நாம் காரணமாகலாமா? என்று சிந்தித்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும்.

யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம்! அந்த வகையில் நடைமுறைக்கு உகந்த செயல்பாட்டை தேர்வு செய்து, தமிழக மக்கள் நலன் சார்ந்து முடிவு செய்யுங்கள்!

1977ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகாலம், தன்னலம் சிறிதும் இன்றி தமிழ்ச் சமுதாயத்திற்காகவே பாடுபட்டுவருபவன் என்ற உரிமையில், எனது பிறந்த நாள் வேண்டுகோளாக இவற்றை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழர்கள் இனி ஏமாற மாட்டார்கள்!

தமிழர் இனி சிறப்பர் என்று நம்புகிறேன்.

 நன்றி வணக்கம்!

- மஞ்சை வசந்தன்
07.02.2018
====

Friday, February 2, 2018

கவிஞர் வைரமுத்துவின் மகிழ்ச்சியும் இல.கணேசனின் மகிழ்ச்சியும் திராவிட ஆரிய போராட்டத்தை திரை விலக்கிக் காட்டுகின்றன!


- மஞ்சை வசந்தன்
அண்மையில் இந்த இருவரும் தங்களின் மன வருத்தத்திலும் தங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் வெளிப்படுத்திய இந்த உணர்வுகள் தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் அல்ல. அவை இரு இனத்தின் போராட்ட உணர்வின் வெளிப்பாடுகள்.
இல.கணேசனின் மகிழ்ச்சி:
"இந்த உடம்பில் எழுந்துள்ள எனது மார்பகங்கள், ஒரு மானுடனைத் தழுவ

வேண்டி வரும் என்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டால் கூட நான் உயிர் வாழ
மாட்டேன்" என்று நம் தமிழ்நாட்டில் ஒரு தெய்வீகப் பெண் (ஆண்டாள்)
பேசியுள்ளாள்.

ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. அவளது பக்தியின் வேகம் தீவிரமாக இருந்ததால் ஆண்டவனை மணம் முடித்தாள் என்றார்.
"இதில் அவளது பக்தி மாத்திரம் அல்ல; கற்பும் தெரிந்தது". வேறொருவனைத்

தழுவ நேரிடும் எனக் 'கேள்விப்பட்டால்'கூட உயிர் வாழ மாட்டேன் என்கிறாள்
அந்த நாச்சியார்.

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
எத்தனை உயர்ந்த பண்பினை விரிக்கும் பாடல் இது! இந்தப் பாடலை வைத்தே

அந்த ஆண்டாளை விமர்சனம் செய்தார்கள் என நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

ஒரு சமுதாயம் எத்தனையோ நூற்றாண்டு காலமாக ஒருவரை நினைவுகூர்ந்து,

பூஜிக்கத் தகுந்தவராகக் கருதுகிறது என்றால் அவரைப் பற்றி விமர்சனம்
செய்யும் முன் சிந்திக்க வேண்டாமா? விமர்சனம் செய்யும் தகுதி தான் நமக்கு
உண்டா?

நான் 1970 முதல் பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தாலும் ஓரிரு உதாரணங்களை முன் வைக்கிறேன்.
சேலத்தில் நமது ஹிந்துக் கடவுள்களை கேவலப்படுத்திய சம்பவம் அன்றைய

"துக்ளக்" இதழ் மூலம் அம்பலமானது. தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்க
பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்தது. வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்போடு தொடர்புள்ளவர்கள். பொதுமக்கள் குறைவு.

ஆனால் நேற்று (12.01.2018) மாலை மயிலை மாங்கொல்லையில் கண்டன

ஆர்ப்பாட்டம். திரளான கூட்டம். ஆர்.எஸ்.எஸ். ஏற்பாட்டில் அல்ல. பொதுமக்கள்
அதிகம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறைவு. புரிந்துகொள்ளுங்கள்.

சம்பவம் (ஆண்டாளைப் பற்றி வைரமுத்து எழுதியது) வருத்தம் தந்தாலும்

எதிர்விளைவு (பார்ப்பனர் போராட்டத்தில் குதித்தது) மகிழ்ச்சி தருகிறது."
என்கிறார். இது இல.கணேசனின் மகிழ்ச்சி!

கவிஞர் வைரமுத்துவின் மகிழ்ச்சி
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.5 இலட்சம் வழங்கிப் பேசிய கவிஞர் வைரமுத்து அவர்கள்,
"382 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களில் தொன்மையானது.
தமிழோ உலக மொழிகளில் தொன்மையானது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள்
தொன்மையுள்ளது. அந்தப் பழந்தமிழ் இந்தப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவது
பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமை!

இதுவரை அப்பல்கலைக்கழகத்தில் 7 மொழிகள் இருக்கை பெற்றவை. ஆனால், அதில்
சீனத்தைத் தவிர மற்றவை வழக்கொழிந்து செத்த மொழிகள். ஆனால், என்றும் இளமை
குன்றா தொன்மைத் தமிழ் இடம் பெறுவது உலகுக்குக் கிடைத்த பெருமை!

நான் நேசிக்கும் மக்களையெல்லாம் இங்கு ஒரு கூரையின் கீழ் சந்திக்கிறேன்.
புயல் விண்ணில் வந்தால் மழை மண்ணில் உண்டு!
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு
ஒரு தீமைவந்து எனக்கு விளைந்தது
நன்மை என்ன தெரியுமா?
எங்கெங்கோ இருந்த தமிழ்ச் சிங்கங்கள் ஒரு அணியில் சேர்ந்து நிற்கின்றன" என்றார். இது வைரமுத்துவின் மகிழ்ச்சி.
ஆண்டாள் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரையின் இறுதிப் பகுதியை எடுத்துத்
திரித்து, அதைக் கொண்டு மதவெறியை உண்டாக்கி, பயன்பட சில அற்பர்கள் முயன்று
அவருக்குத் தீமை தந்தார்கள்.

அது தனக்கு நேர்ந்த தீங்கு என்றாலும், அதிலும் ஒரு நன்மை என்னவென்றால்,
ஆரிய பார்ப்பனர்கள் ஆண்டாளை வைத்து அரசியல் ஆதாயம் பெறப் பார்த்தார்கள்.
ஆனால், எங்கெங்கோ இருந்த தமிழர்களோ வைரமுத்துவை வைத்து ஒன்றுசேர்ந்து
ஆரியத்திற்கு எதிரான அணியை அமைத்து விட்டார்கள்.

இது தீமையுள் கிடைத்த நன்மை! இதனால் தனக்கு மகிழ்ச்சி என்கிறார் வைரமுத்து.
ஆக, ஆண்டாள் பிரச்சினையில் ஆரிய பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்தது இல.கணேசனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
அதே ஆண்டாள் பிரச்சினையில் தமிழர்கள் வீதிக்கு வந்து
வைரமுத்துக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாத சங்கராச்சாரியைக்
கண்டித்து  தமிழுக்காகவும் போராடுவது வைரமுத்துவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆக, ஆண்டாள் பிரச்சினையும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையும்,
ஆண்டாளுக்காகவோ, தமிழுக்காகவோ வந்த பிரச்சனைகள் அல்ல. அது
திராவிடத்திற்கும், ஆரிய இனத்திற்குமான உட்பகையின் வெளிப்பாடுகள்.

இல.கணேசன் ஆண்டாளுக்காக பொதுமக்கள் வீதிக்குவந்து போராடுவதாய் குறிப்பிடுவது உண்மையல்ல. ஆரிய பார்ப்பனர்க் கூட்டம் வீதியில் இறங்கியது என்பதே உண்மை! மயிலாப்பூரில் யார் அதிகம் என்பது மக்களுக்குத் தெரியாதா?
அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரியை எந்த ஆரிய பார்ப்பனரும் கண்டிக்கவில்லை. தமிழர்கள் மட்டுமே கண்டித்தனர்.
இவை வெளிப்படுத்தும் உண்மை என்ன?
இங்கு எல்லா பிரச்சனையும் மோதலும் இனப் போராட்டங்கள் என்பதுதான்.
இடையிலே எஸ்.ஆர்.சேகரும், எஸ்.வி.சேகரும்
"வைரமுத்து, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், அபுபக்கர் போன்றவர்கள் கடந்த
வாரம் அழகுகாட்டிய ஹீரோக்கள். ஹிந்து சமுதாயத்தின் மீது சேற்றை வாரி
இறைத்தவர்கள். அதற்காகக் கடுமையான எதிர்கணை தாக்குதல்களால் காயம்பட்டு
வீழ்ந்தவர்கள். தாக்கிவிட்டார்களே என ஒப்பாரி வைத்து கூக்குரலிட்டு ஊரை
பஞ்சாயத்துக்காக கூட்ட முயன்று தோற்றுப் போனவர்கள். இவர்கள் ஹிந்து
சமுதாயத்தை தாக்கிய விதம் வேறுபட்டாலும் நோக்கம் மட்டும் ஒன்றாக இருந்தது.

அகந்தையான பேச்சுக்களுக்கு ஹிந்துக்களின் குறைந்த எதிர்வினையே இருந்தது
ஒரு காலம். ஆனால் இன்று புனிதவதி மார்கழி நாயகி ஆண்டாளின் பிறப்பிலும்,
குலத்திலும் இழியுரை நிகழ்த்திய ”களவாணி கோத்திரமே காளை மூத்திரமே” என தன்
குலத்தையே தரம் தாழ்த்தி சினிமா பாட்டெழுதிய வைரமுத்துவுக்கு ஹிந்துக்கள்
கொடுத்த எதிர்வினை யாரும் எதிர்பார்க்காததே!

அடிச்சா கேட்க ஆளில்லாத அனாதையாய் இருந்தது அந்தக் காலம்!" என்கிறார்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர். இதற்கு என்ன பொருள்?

அடிச்சா கேட்க ஆளில்லாத அனாதையாய் இருந்தவர்கள் யார்?
இப்போது அதிகாரம் கிடைமத்துவிட்டதாம் ஆட்டம் போடுவது யார்?
இதற்கெல்லாம் விளக்கமா சொல்ல வேண்டும்?
ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராய் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த உணர்வுக் குரல் அந்த ஆளுக்கு ஒப்பாறியாம்!
பாரதிராஜாவும், பிரகாஷ்ராஜூம் களத்தில் காயப்பட்டு வீழ்ந்து விட்டார்களாம்!
இவர்களெல்லாம் இந்து சமுதாயத்தின் மீது சேற்றைவாரி இறைத்தவர்களாம்! இவர் சொல்லும் இந்து சமுதாயம் எது என்று இப்போது புரிகிறதா?
மேற்கண்டவர்கள் எந்தச் சமுதாயத்தை எதிர்த்து ஆவேசமாகப் பேசினார்கள்? ஆரிய பார்ப்பனர்களை எதிர்த்துத்தானே!
அப்படியிருக்க இந்து சமுதாயத்தை இவர்கள் எதிர்த்தார்கள் என்று கூறுவதன்
மூலம் இந்து சமுதாயம் என்பது ஆரிய பார்ப்பன சமுதாயம் என்பதை அவரே
எதிர்க்கவில்லையே, ஆரியர்களைத் தானே எதிர்த்தனர்?
ஒப்புக்கொண்ட வாக்குமூலம் அல்லவா? இவர்கள் பக்தர்களான தமிழர்களே

ஆக, இல.கணேசன், எஸ்.ஆர்.சேகர், எஸ்.வி.சேகர் இவர்களின் உணர்வு முழக்கம்
ஆரியத்தின் குரலாயும், வைரமுத்து, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், அபுபக்கர்
போன்றோரின் குரல் திராவிடத்தின் குரலாயும் ஒலிப்பது தெளிவாய்த் தெரிகிறதே!

எனவே, திராவிட ஆரிய போர் இனறு உச்சத்தை எட்டியுள்ளது. எச்சரிக்கையாய்
ஒற்றுமையாய் இருந்து ஆரியர் அல்லாதோர் அவர்களை வீழ்த்தி மனிதம் காக்க
வேண்டியது மகத்தான கடமையாகும்!

===