அரசியல்

Wednesday, October 7, 2015

காந்திக்கு முன் ”மகாத்மா” என்று போற்றப்பட்டவர் யார் தெரியுமா?



ஜோதிராவ் பூலே!

 இவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். பார்ப்பன ஆதிக்கத்தை அகற்றி, பார்ப்பனரல்லாதார் உயர அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர்.

 இந்தவகையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் முதல் குரல் கொடுத்தவர்,
பிற்படித்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காய் முதன் முதல் அமைப்புகளைத் தொடங்கியவர்.

 1868 ல் “சத்திய ஜோதக் சமாஜ்” என்ற அமைப்பினை ஏற்படுத்தி பார்ப்பனர் அல்லதாருக்காகப் பாடுபட்டார்.

 இவரது ஈடு இணையற்ற சேவைக்காக, இவர் “மகாத்மா” என்று அழைக்கப்பட்டார்.

 இவர் மறைவிற்குப்பின் மேற்கண்ட அமைப்பை ஷாகுமகராஜ் தொடர்ந்து நடத்தினார்.

 பார்ப்பனர்கள் பொறியாளராய், மருந்துவராய் வரவிரும்புவது சரியல்ல – காந்தியார் சொன்னார்.

 பார்ப்பனர்கள் குலதர்மப்படி வேதம் தானே ஓதவேண்டும்!

அவர்கள் மற்றத் தொழிலுக்கு ஆசைப்படுவது தவறல்லவா?” என்றார்.

 காந்தி! அதுமட்டுமல்ல அரசியலில் மத்ததைக் கலக்கக் கூடாது என்றார்.
இவ்வாறு சொன்ன சில வாரங்களிலே, பார்ப்பனர் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்!

No comments:

Post a Comment