அரசியல்

Thursday, February 23, 2017

ஊடகங்களின் யோக்கியதை இதுதானா?

அரசியல் தலைவர்களை துளைத்துத் துளைத்து கேள்வி கேட்கிறீர்கள்?
ஜக்கி வாசுதேவின் மோசடிகள் பற்றி ஏன் கேள்விகளை எழுப்பவில்லை? விவாதங்களை நடத்தவில்லை?
காட்டை சட்டவிரோதமாக வளைத்து பல கொடுமைகளைச் செய்யும் அவர் பற்றி ஏன் செய்திகள் வருவதில்லை?
கொலைக் குற்றவாளி, ஆக்கிரமிப்பாளர் என்பதோடு சிறுவர் வதை, கட்டணக் கொள்ளை, முறையான இரசீது இன்மை என்று ஆதாரபூர்வமாய் அவருக்கு எதிராய் சாட்சிகள், சான்றுகள் இருக்க ஏன் அவைபற்றி விவாதிப்பதில்லை; கண்டிக்கவில்லை?
7 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்றவன் தாய் தந்தை பற்றி ஏன் எந்த ஊடகமும் எழுதவில்லை? அந்தக் கொடியவனுக்கு ஜாமீன் பெற முயலும் அவர்களும் குற்றவாளிகளே!
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை டேரா அடித்து காட்டிய தொலைக்காட்சிகள், இறுதிநாள் நடந்த குப்பத்து வன்முறையை ஏன் பெரிதாய்க் காட்டவில்லை?
சங்கராச்சாரி கொலைக் குற்றங்களை கண்டுகொள்ளாமல் விடுவது என்ன ஊடக தர்மம்?
கேடிச் சாமியார் ஒருவர் கோடிக்கணக்கில் கணக்கின்றிச் சுரண்டி, பொது இடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்து, உரிய அனுமதியின்றி கட்டடங்கள் கட்டி, மாபெரும் சிலை வைத்து கவர்ச்சி மோசடி செய்யும்போது அதற்கு இந்திய நாட்டின் பிரதமரே வந்து ஆதரவு தருவதை ஏன் ஊடகங்கள் கண்டிக்கவில்லை?
ஊடகங்கள் கண்டித்தால் பிரதமர் வருவாரா?
வளைத்து வளைத்து கேட்கும் பாண்டேக்கள் வாலைச் சுருட்டி வாய்மூடி நிற்பது ஏன்?
கார்பரேட் சாமியார்களின் மோசடிக்கு, கார்பரேட் தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும், கார்ப்பரேட் ஏவலாள் பிரதமரும் என்பதாலா? அப்படியென்றால் நியாயம் பேச உங்களுக்கு ஏது யோக்கியதை?
- மஞ்ஞை வசந்தன் Manjai Vasanthan

Wednesday, February 22, 2017

விளைச்சலைக் கண்டதும் அறுவடைக்கு முயலும் கமலகாசன்கள்! தமிழர்களே எச்சரிக்கை!

22-2-2017
விளைச்சலைக் கண்டதும்
அறுவடைக்கு முயலும் கமலகாசன்கள்!
தமிழர்களே எச்சரிக்கை!

தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சமாகப் பறிக்கப்பட்டுவரும் நிலையில், சல்லிக் கட்டிற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டதால் இளைஞர்கள் வெகுண்டு எழுந்தனர்.

தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் எழுந்து கூடவே, பொதுமக்களும் இணைந்து தமிழகமே போராட்டக் களமானது. விளைவு சல்லிக்கட்டுக்கான சட்டம் வந்து, இளைஞர்கள் எழுச்சி வென்றது.

இந்நிலையில், .தி.மு.. உடைய, இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த பா... மத்திய அரசும், ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டமும் பலவகையில் முயற்சி செய்தன.

.பன்னீர்செல்வத்தை மிரட்டி, தன் கையாளாக ஆக்கி, பினாமி ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சி செய்தது. அதற்குக் கூட்டாளியாக தீபாவை சேர்த்துவிட்டது.

ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண் என்பதால் அந்த இடத்தை நிரப்ப தீபா என்னும் பார்ப்பனப் பெண்ணை தூக்கி நிறுத்தியது. அது சரிப்பட்டு வராமையால் தற்போது கமலகாசன் என்ற பார்ப்பனரை உசுப்பி விட்டிருக்கிறது.

அரசியல் சபலமுள்ள கமலகாசன் இளைஞர்கள் எழுச்சி என்ற விளைச்சலை அறுவடை செய்துவிடலாம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு சூழ்ச்சி வலையை விரித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் அறிவும், ஆற்றலும், தலைமைப் பண்பும் உள்ள எத்தனையோ தமிழ் இளைஞர்கள் உள்ளனர்.

கமலகாசனோ, இரஜினிகாந்தோ, வந்துதான் தலைமையேற்க வேண்டியதில்லை! கோடிக்கணக்கில் சம்பாதித்து கருப்புப் பணத்தை இருப்பு வைத்து ஏமாற்றி வருபவர்கள், மக்களால் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் தகுதி உடையவர்கள் ஆகிவிட முடியாது.
இந்தத் தமிழகத்திற்குத் தேவை சேவையே தன் வாழ்வின் நோக்கு என்று கொண்டு வாழ்நாளெல்லாம் எந்த பலனும் எதிர்பாராமல் உழைக்கும் எக்ஸ்னோரா நிர்மல், அய்..எஸ். சகாயம் போன்ற, தியாக உள்ளம் கொண்ட இளைஞர் எம் தமிழ்நாட்டில் ஏராளமாய் உள்ளனர்.

அந்த இளைஞர்கள் வருவார்கள் நல்ல தலைமையைத் தருவார்கள். விளைச்சலைக் கண்டதும் அறுவடை செய்ய முயலும் கமலகாசனோ, தீபாவோ, இரஜினிகாந்தோ எமக்குத் தேவையில்லை! இளைஞர்களே எச்சரிக்கையாய் இருங்கள்! விழிப்போடு செயல்படுங்கள்.

ஊர்தோறும் இளைஞர் நற்பணிமன்றங்களை அமைத்து தொண்டு செய்யுங்கள், தகுந்த வாய்ப்பு வரும்போது அரசியலுக்கு வாருங்கள். அதுவரை எவர் ஆண்டாலும் அவர்கள் சரியாக ஆள, சுரண்டாமல், இலஞ்சம் இல்லாமல் ஆள, மதுக்கடைகளை மூட, விவசாயி, மீனவர், மாணவர் என்று பலதரப்பு பிரச்சினைகளும்  தீர, நீட் தேர்வை விலக்க போராடுங்கள்.

இளைஞர்கள் போராடினால் ஆட்சியாளர்களை சீர்செய்து, மக்கள் நலங்காக்க முடியும்! இது உறுதி!

ஆட்சியாளர்கள் இளைஞர் எழுச்சிக்கு அஞ்சி நடக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. எழுச்சியை மீறி எந்த ஆட்சியாளரும் இனி ஊழல், சுரண்டல் செய்ய முடியாது! இளைஞர்களின் மனவுறுதியும், துணிவும் ஒற்றுமையுமே நாட்டையும் மக்களையும் காக்கும்! நீங்கள் முயன்றால் காக்கலாம்!

- மஞ்சை வசந்தன்

---

Saturday, February 18, 2017

அரசியல் என்பது ஒரு சூதாட்டம்!

என் இனிய இளைய சமுதாயமே!

இன்றைய தமிழக அரசியல் காட்சிகள் கண்டு வெட்கப்பட்டிருப்பீர்கள்; வேதனைப் பட்டிருப்பீர்கள்! இன்றைக்கு நடந்த காட்சிகள் தேவையற்றவை; தவறானவை!

அரசியல் என்பது ஒரு சூதாட்டம்!

இதில் எதிரி எப்படி செயல்படுகிறார்களோ அப்படித்தான் மற்றவர்கள் செயல்படுவார்கள்.

எம்.எல்..க்களை அடைத்து வைத்தல் என்பது இந்தியா முழுக்க எல்லா காலங்களிலும் நடந்து வரும் செயல்தான். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

வெளியில் வந்தால் கோடிக்கணக்கில் பேரம் பேச ஆட்கள் இருக்கும்போது, அதைத் தடுக்க ஒருதரப்பு அப்படித்தான் செய்யும்.

மக்கள் கருத்தறிந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்பது வேடிக்கையான சந்தர்ப்பவாதம்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்காக மக்கள் வாக்களித்தார்கள். அவர் பிரதமராக ஆகியிருக்கிறார். அவர் ஏதோ காரணத்தால் பிரதமராக இல்லாத நிலை வந்தால், மீண்டும் இந்தியா முழுக்க எம்.பி.க்கள் மக்கள் கருத்தறிந்துதான் அடுத்த பிரதம மந்திரியைத் தேர்வு செய்வார்களா? பெரும்பான்மை எம்.பி.க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தானே அடுத்த பிரதமர் ஆவார். அப்படியிருக்க மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்? மக்கள் கருத்தை எப்படி அறிய முடியும். ஒவ்வொருவராய் சந்திக்க முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பான்மை எம்.எல்..க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதல்வர். பெரும்பான்மையில்லாதவர்கள் பிதற்றுவதெல்லாம் சரியாகி விடாது.

எடப்பாடி அரசு, ‘நீட்தேர்வு விலக்கு பெறுவதிலும், விவசாயிகள் பிரச்சினை தீரவும், நதி நீர் சிக்கலில் தமிழக உரிமைகளைக் காக்கவும், மீனவர் சிக்கல் களையப்படவும், தமிழக மக்கள் நலங்காக்கவும், சாராயக் கடைகள் மூடப்படவும் முழுமையாகப் பாடுபடவேண்டும்.

இலஞ்சம், மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை அறவே இல்லாத நிலை வேண்டும்.

சசிகலா குடும்பத்தவர் ஆதிக்கம் அறவே இருக்கக் கூடாது. சசிகலா குடும்பம் விலகி நிற்பதுதான் அக்கட்சிக்கு அவர் செய்யும் நன்மையாகவும் உதவியாகவும் இருக்க முடியும்!

தி.மு.. தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை அவசரத்தால் கெடுத்துக்கொண்டு விட்டது. அவர்கள் .தி.மு.. சிக்கலைப் புறந்தள்ளி மக்கள் பிரச்சினையைப் பேசுவதுதான் செல்வாக்கிற்கு உதவும். நடந்ததை மறந்து, இனியாவது மக்கள் பிரச்சினைக்காகப் பாடுபட வேண்டும். .தி.மு.. சிக்கலில் மூக்கை நுழைக்கக் கூடாது.

.பன்னீர்செல்வம் ஒரு கபட நாடகப் பேர்வழி. அவர் பி.ஜே.பி.யின் பினாமி. இளைஞர்கள் ஏமாறக் கூடாது. பி.ஜே.பி.யை பற்றி நிற்பதிலும், தீபாவுடன் சேர்ந்ததிலுமே அவர் ஒரு சந்தர்ப்ப சுயநலக்காரர் என்பது தெரிந்துவிட்டது.

தமிழர் நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும் நமக்கு எதிர்ப்பு இல்லை

ஆனால், மதவாத பி.ஜே.பி.க்கு மட்டும் இடம் கொடுக்கக் கூடாது. அது தமிழினத்தின் அழிவிற்கு வழிவகுக்கும். தமிழர் நலம் நாடும் கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு பி.ஜே.பி.க்கு வழி வகுக்கக் கூடாதுஇதில் இளைஞர்களும், மக்களும், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்.


Wednesday, February 15, 2017

“பன்னீர்செல்வம் அணி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அணியே”

பன்னீர்செல்வம் அணி
பா..., ஆர்.எஸ்.எஸ். அணியே
ஆவடிகுமார் ஆவேசம் சரியானதே!

தமிழக மக்களே! எச்சரிக்கை!


நெஞ்சினில் நஞ்சுவைத்து நாவினில் அன்புவைத்து நல்லவன்போல் நடிப்பான் ஞானத்தங்கமே! அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே!’’ என்ற பாடல், பன்னீர்செல்வத்திற்கு ஒட்டுமொத்தமாக பொருந்தியிருக்கிறது.

அவரது வளர்ச்சிக்கும் உயர்விற்கும் அவரின் பணிவு, விசுவாசம் இரண்டுமே காரணமாய் அமைந்தன என்றே எல்லோரும் கூறுவர். ஆனால், அவை வெறும் நடிப்புதான் என்பது இப்பொழுது பட்டவர்த்தனமாகத் வெளிப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா அவர்கள் இறந்ததும் பன்னீர்செல்வம் வழக்கம்போல் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக சசிகலாவைத் தேர்வு செய்தனர். அதை முன்மொழிந்தவரே பன்னீர்செல்வம்தான்.

அப்படியிருக்க இருநாள் கழித்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஒரு நாடகம் நடத்தி, கூட்டத்தைக் கூட்டி, செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பேட்டியில் தான் வற்புறுத்தப்பட்டதாகவும், தான் சசிகலாவை எதிர்த்து நின்று போராடப் போவதாகக் கூறி தன் உண்மை உருவத்தை உலகிற்குக் காட்டியுள்ளார்.

ஓர் கட்சியின் உண்மையான விசுவாசி என்றால் தனக்குள்ள மனக்குறையை, மாற்றுக் கருத்தை, வெறுப்பை கட்சியின் கூட்டத்தில் தான் சொல்ல வேண்டும். மாறாக, முக்கால் மணி நேரம் கண்ணை மூடிக்கொண்டு நடித்து எழுந்து, செயலலிதா ஆன்மாவோடு பேசினேன் என்று அகில உலகப் பொய்யை அவிழ்த்து விடுவது, உண்மைத் தொண்டனுக்கு விசுவாசிக்கு அழகல்ல, மாறாக இது துரோகச் செயலாகும்.

பா..., ஆர்.எஸ்.எஸ்.ஸின் கையாள்:

...தி.மு..வைச் சேர்ந்த ஆவடி குமார், “.பன்னீர்செல்வம் ஆர்.எஸ்.எஸ்., பா...வின் கையாளாகச் செயல்படுகிறார்என்று கூறியது தற்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது. கீழ்க்கண்டவற்றை கூர்ந்து நோக்கினால் இந்த உண்மையை அறியலாம்.

¨           பா...வினரும், பார்ப்பன பத்திரிகைகளும், ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் பன்னீர் செல்வத்தை தீவிரமாக ஆதரித்து வருகின்றனர். இதற்குக் காரணம், அவர் பா...வின் கையாளாகச் செயல்படுவேன் என்று உறுதியளித்து உள்ளுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டதுதான்.

¨           சல்லிக்கட்டு பிரச்சினையில் மோடி அரசு பன்னீர்செல்வத்தின் முயற்சிக்கு காட்டிய வேகம், தம்பிதுரையை சந்திக்க மறுத்த கோபம்.

¨           தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு வந்த ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பிற்கு பன்னீர் செல்வம் அரசு அளித்த அனுமதி!

¨           மைத்ரேயன் என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை நம்பிக்கைக்குரியவராக, தூதுவராக பன்னீர் செல்வம் பயன்படுத்துவது.

¨           ஆளுநரைச் சந்திப்பதில் மைத்ரேயனுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை.

¨           தனியாக பிரிந்துவந்த அன்றே ஜெயலலிதா ஒதுக்கிவைத்த பார்ப்பனப் பெண்ணான தீபாவிற்கு பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பு.

¨           பிப்ரவரி 24ஆம் தேதிதான் அரசியல்பற்றி முடிவெடுப்பேன் என்ற தீபா, 14ஆம் தேதியே பன்னீர்செல்வத்திடம் வந்து சேர்ந்த மர்மம்.

¨           தன் அணியில் சேர்ந்த தீபாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்ததோடு, தன் மனைவி மூலம் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்த பாசப்பெருக்கு.

¨           பன்னீர் செல்வம் பதவி துறந்த நிலையில், அவர் பெரும்பான்மை உறுப்பினர் பட்டியல் அளிக்காத நிலையில் அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் காத்துக் கிடக்கும் (நாள்களைக் கடத்தும்) அநியாயம்.

¨           பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவு கடிதம் அளித்தும் எடப்பாடி பழனிச்சாமியை அழைக்காத ஆளுநரின் அநீதி!

¨           10க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பா...வின் உதவியோடு தன் அணிக்கு சேர்த்த சூட்சமம்.

¨           ஒட்டுமொத்தமாகச் சொன்னால், பன்னீர்செல்வத்துக்காக பார்ப்பனர்களும் பா... அரசும், ஆளுநரும் அப்பட்டமாகக் காட்டும் ஒருதலைச் சார்ப்பு ஆதரவு, அவர் பா..., பார்ப்பனர் கையாளாக ஆகி, திராவிட இயக்கத்திற்கு துரோகம் இழைக்கிறார் என்பதை அய்யத்திற்கு இடமின்றி வெட்டவெளிச்சமாய் அறிவிக்கிறது.

ஆனால், சில ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஏதோ பன்னீர்செல்வம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் போலவும், தமிழர்களின் பாதுகாவலர் போலவும், மிக மிக நல்லவர் வல்லவர் என்பதாகவும் சித்தரித்து, மக்கள் ஆதரவு அவருக்கே இருப்பதாகக் காட்டுவது ஓர் அப்பட்டமான மோசடிப் பிரச்சாரமாகும்!

சசிகலா ஊழல் பேர்வழியென்றால் ஜெயலலிதாவும் ஊழல் பேர்வழிதான்! ஜெயலலிதாவை இதய தெய்வம் என்று கூறிவிட்டு சசிகலாவை ஊழல் பெருச்சாளி என்பது எவ்வகையில் சரி?

பன்னீர்செல்வம் என்ன ஊழலே செய்யாத உத்தமரா? சல்லிக்கட்டில் அவர் சாதித்ததாகச் சொல்வது தவறு. சாதித்தவர்கள் தன்னலமற்ற தமிழக இளைஞர்கள். அந்த பெருமையை அடைய எவருக்கும் உரிமையில்லை.

இன்னும் சரியாகச் சொன்னால், சல்லிக்கட்டு நடத்த இப்போது கொண்டுவந்த சட்டத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்து, சல்லிக்கட்டு நடத்தாத .தி.மு.. அரசும், மோடி அரசும் தமிழர்க்கு துரோகம் செய்தவர்கள். அப்படியிருக்க அவர்கள் எப்படி பாராட்டுக்குரியவர்கள் ஆவர்?

ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே!

பன்னீர் செல்வம் எந்தவித ஆதரவு கடிதமும் தந்து உரிமை கோரவில்லை.

அப்படியிருக்க இருவர் கோரியுள்ளதாய்க் கூறுவதே தப்பான கருத்து. ஆளுநர் உடனடியாக எடப்பாடிப் பன்னீர் செல்வத்தை ஆட்சி அமைக்க கேட்டுக் கொள்ளாதது, பெரும்பான்மையுள்ள ஓர் ஆட்சியை கவிழ்க்க முயலும் சதிச்செயலாகும்.

எனவே, ஆளுநர் செயலை பன்னீர்செல்வம் அணி கண்டிக்காமல், ஆளுநருக்கு பாராட்டு தெரிவிப்பது அவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி அணியில் சேர்த்துவிட்டதையே காட்டுகிறது.

மதவெறி அமைப்புகளுக்கு, தந்தை பெரியார் மண்ணில் கைகொடுத்து உதவும் பன்னீர் செல்வத்திடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம். வெளிநடப்பில் ஏமாந்தால் மதவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். எனவே, தமிழ மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் விழிப்போடு சிந்தித்துச் செயல்பட வேண்டும். மதவாத சக்திகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.


ஆவடி குமார் வார்த்தையில், “...தி.மு.. (ஆர்.எஸ்.எஸ். அணி)யிடம் தமிழர்களே எச்சரிக்கையாய் இருங்கள்!

மஞ்சை வசந்தன்