அரசியல்

Wednesday, October 7, 2015

வள்ளலார் அடித்துக் கொல்லப்பட்டார்!

வள்ளலார் அடித்துக் கொல்லப்பட்டார்!.........................................

கடலூர் மாவட்ட கெசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது................



 வள்ளலார் வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்தினார்.

 பின் திறந்து பார்த்தால் வள்ளலாரைக் காணோம். அவர் பதிவாகிவிட்டார் (மறைந்து விட்டார்) என்று புரளியைக் கிளப்பிவிட்டனர் எதிரிகள்.

 ஆனால், அவர் அடித்துக்கொல்லப்பட்டார் என்பதே உண்மை. வள்ளலார் சாதி கூடாது என்றார், மதம் கூடாது என்றார், சாஸ்திரங்களைக் குப்பை என்றார். மதத்தை பேய் என்றார். சடங்குகள் கூடாது என்றார்.

 சாதி ஒழிந்தால் பார்ப்பனரின் உயர்வு ஒழியும், சடங்கு ஒழிந்தால் பார்ப்பனரின் வருவாய் ஒழியும். தங்களின் உயர்வு,வருவாய் இவற்றைப் பாதிக்கும் படி வள்ளலாரின் பணி இருந்ததால்
ஆத்திரமடைந்த பார்ப்பனர்கள் அவரை ஒழித்துக் கட்டத்திட்டமிட்டு கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பத்திற்கு நடந்து சென்றபோது அடித்துக் கொன்று புதைத்துவிட்டு பதிவடைந்து விட்டார் என்றுகூறி மக்களை ஏமாற்றினர்.

 உயிர் நேயம் வளர்த்தார். வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பசித்தவயிற்றிற்கு உணவளிக்க சத்திய தருமச்சாலை கண்டார்.

 அவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்று வரை அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பசியென்று வருவோருக்கு அங்கு உணவளிக்கப்படுகிறது.
எனது ஊருக்கு அருகில் உள்ள மருதூர் என்ற ஊரில் தான் வள்ளலார் பிறந்தார். அவர் கருங்குழியில் (வடலூருக்கு அருகில்) தங்கியிருந்தார்.
வள்ளலாரைப் பெரியார் மிகவும் விரும்பிப் போற்றினார். அவர் எழுதிய ஆறாம்திருமுறை அறிவுப் பெட்டகம்.

 சமதர்மக் கொள்கையை உலக அளவில் முதலில் முழங்கியவர் வள்ளலார். அதன்பின்தான் கம்யூனிஸ்ட்டுகள் முழங்கினர்.

 தன் கொள்கை பரவ ஒரு இயக்கம், ஒரு சங்கம், ஒரு கொடி என்று அமைப்பு ரீதியாக முதலில் செயல்பட்டவர் வள்ளலார்.

 வள்ளலார் மிகச்சிறந்த சித்த வைத்தியரும் ஆவார். பல மூலிகைகளை அறிமுகப்படுத்தினார்.

 5.10.15 அன்று வள்ளலார் பிறந்த நாள். வாழ்க வள்ளலார் சமத்துவம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment