அரசியல்

Wednesday, October 14, 2015

மனோரமாவுக்கு மாற்று இல்லை!



 ”ஈடு செய்ய முடியாத இழப்பு!” ”அவரிடத்தை எவரும் நிரப்ப இயலாது!” என்பவை மனோரமாவைப் பொருத்தவரை 100% சரியானது.
கோபி சாந்தா என்பதே இவரது பெயர். இளமையில் வறுமை என்றாலும் நாடகத்தின் மீது நாட்டம்.

 அக்காலத்தில் வீதிநாடகங்கள் அதிகம். அப்படி காரைக்குடி கடைவீதியில் நடந்த “அந்தமான் கைதி” என்ற நாடகத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்ற இவருக்கு பாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் குரல் வளம் கேட்டவர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்தனர். நாடெங்கும் அவர் பேசப்பட்டார். மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டது.
எஸ்.எஸ். இராசேந்திரனின் நாடகக் குழுவில் சேர்ந்து, கலைஞர் எழுதிய ”மணிமகுடம்” நாடகத்தில் முதன் முதலில் நடித்தார். அதன் பின் நாடகத் துறையில் பெரும் புகழ் பெற்றார்.

முதன் முதலில் சிங்களப் படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானர். தமிழில் முதன் முதலில் ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் நடித்தார். ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து நடித்து 1500 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். மத்திய அரசின் “பத்மஸ்ரீ”விருது இருவருக்கு அளிக்கப்பட்டது.

 நடிப்பில் ஆண்களில் சிவாஜி எப்படியோ அப்படி பெண்களில் மனோரமா! அவருக்கு இணையாரும் இல்லை. பாத்திரத்திற்கு உயிரூட்டும் திறன் பெற்றவர். பாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். இயல்பான நடிகர். மிகை நடிப்பு இவரிடம் இருக்காது.

 எல்லோரிடமும் பாசத்துடன் பழகக் கூடையவர். உலக அளவில் பேசப்படத்தக்க ஒரு தமிழச்சி!

 உழைப்பால் உயர்ந்த தமிழ் ஆச்சி! அவருக்கு மரணம் இல்லை! அவர் என்னென்றும் இவ்வுலகத்தவருடன் வாழ்வார்! அவர் பெருமையை ஒவ்வொரு தலைமுறையும் பேசிக் கொண்டிக்கும். அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழர்கள் காட்டிய பாசம் அவரின் பெருமைக்கு நற்சான்று.
வாழ்க மனோரமா புகழ்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

No comments:

Post a Comment