அரசியல்

Thursday, March 30, 2017

ஆரியம் போற்றட்டும் சீதையை - தமிழன் போற்ற வேண்டும் மதிவதனியை!

ஆரியம் போற்றட்டும் சீதையை - தமிழன் போற்ற வேண்டும் மதிவதனியை!

யார் இந்த மதிவதனி? உள்ளே படியுங்கள்!

- மஞ்சை வசந்தன்

“1984, ஜனவரி 9, தமிழ் மாணவர்கள் மீதான இலங்கைக் கல்வித் துறையின் பாரபட்சத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் உண்ணானோன்பு மேற்கொண்டனர். அதில் நான்கு பேர் பெண்கள். மூன்ற நாள்களைக் கடந்தும் அந்தப் போராட்டம் தொடர்ந்தது. 

‘உங்களுக்காக நாங்கள் குரல்கொடுக்கிறோம். நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்துவிடாதீர்கள். போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று புலிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும், மாணவர்கள் மறுத்துவிட்டனர். காவல்துறையும் ராணுவமும் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தன.

உண்ணாவிரதத்தின் ஆறாவது நாள் மாணவர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். ஒன்று... அவர்கள் பட்டினியால் சாக நேரும் அல்லது அரசுத் தரப்பால் ஆபத்து நேரும் எனும் சூழல். அவர்களின் உயிரைக் காக்கும் பொருட்டு இயக்கம் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. ஒரு படகு மூலம் அவர்களை சென்னைக்குக் கொண்டுவந்து திருவான்மியூரில் இருந்த பாலசிங்கம் _ அடேல் தம்பதியினர் வீட்டில் தங்க வைத்தனர்.

அந்த மாணவிகளின் பெயர் _ஜெயா, வினோஜா, மதிவதனி, லலிதா. சென்னையில் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் ஹோலி பண்டிகை வருகிறது. அருகில் இருந்தவர்களைப் பார்த்து அந்த மாணவர்களும் வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடினர். அப்போது அங்கு வந்த புலிகள் தலைவர் பிரபாகரன் மீதும் மதிவதனி வண்ணப் பொடிகளைத் தூவினார். ‘இது நமது பண்டிகை இல்லையே...’ என்று பிரபாகரன் கோபப்பட்டார். ஆனால், இதன் மூலம்தான் மதிவதனி பிரபாகரனைக் காதலிப்பதை பாலசிங்கம் கண்டுபிடித்தார்.

உண்ணாவிரதத்தில் சாகாமல் காப்பாற்றப்பட்ட அதே மதிவதனிதான், 2009_ம் ஆண்டு மே மாதம் வரை, ஒவ்வொரு கணமும் மரணம் துரத்தத் துரத்தப் போராடி பிரபாகரனோடு வாழ்ந்தார்.

வண்ணப்பொடி தூவித் தொடங்கிய அவர் வாழ்வில், அதிகம் பார்த்த வண்ணம் ரத்தச் சிவப்புதான். பாலசிங்கத்தின் மனைவி அடேலும் மதிவதனியைப் போன்றவரே. இங்கிலாந்தில் பிறந்த அடேல் பல காலம் ஈழப் போர்க்களத்தில்தான் இருந்தார். அடேல்தான் புலிகளின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தினார்.

பெண் புலிகளுக்கும் தலைமைக்குமான தொடர்பாளர்களாக மதிவதனியும் அடேலும் திகழ்ந்தனர். பால் வேற்றுமையற்ற தலைமை எனும் புலிகளின் செயல்திட்டத்தைச் செயல்படுத்தியதிலும், பெண்களுக்கான தனிப் படையணியை உருவாக்கியதிலும் இந்த இருவரின் பங்கும் முக்கியமானது. செஞ்சோலை சிறுவர் பள்ளியை நிர்வகிப்பதில் மதிவதனி பெரும் பங்காற்றினார்.

உலகம் எங்கும் நடந்த உரிமைக்கான போராட்டங்களில் இப்படியான பெண்களின் பங்கு பதிவுபெறாத வரலாறாகவே இருக்கிறது. 

மதிவதனியையும் அடேலையும் தனி மனுஷியாகப் பார்க்கவில்லை. களத்தில் போராடும் பெண்களின் பிரதிநிதியாகவே பார்க்கிறேன். கணவனோடு இலங்கைக் காடுகளில் அலைந்து திரிந்த சீதை காவியத் தலைவியானார். அதே ஈழத்து மண்ணில் அதே காடுகளுக்குள் அதைவிடவும் அதிக காலம் வாழ்ந்து, அந்த மண்ணிலேயே பிள்ளைகளைப் பெற்று அதே மண்ணுக்காக அவர்களை வாரிக்கொடுத்த மதிவதனி, நம் பாட்டுடைத் தலைவி இல்லையா?
போராட்டங்கள்தான் பாலின வேறுபாடுகளைக் களைகிற முதல் இடமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். 

ஆண்களைவிடவும் போராட்டக் களங்களில் பெண்கள் அதிக ஈடுபாட்டோடு செயல்படுவதையும், உணர்வு பூர்வமாக முழங்குவதை எதிர்த்து நிற்பதையும் கண்டு சிலிர்த்திருக்கிறேன். இதைத்தான் மெரினா போராளிகள் நமக்கு உணர்த்தினர். 

காவல் துறையினர் மாணவர்களை அடித்து, விரட்டி, கடலோரம் கொண்டுபோய் நிறுத்தியபோது, காப்பாற்ற வந்த மீனவர்களில் சரி பாதிக்குமேல் பெண்கள்தான்’’ என்று ஆனந்தவிகடனில் எழுதியுள்ளார் கவிதாபாரதி. 

தமிழன் மதமயக்கத்திலிருந்து விடுபட்டு, தமிழர் பெருமைகளைப் போற்றவும், பாதுகாக்கவும் வேண்டும். தமிழர் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

இளைஞர் ஒவ்வொருவரும் இதை ஆழமாய்ச் சிந்தியுங்கள்!.............


காதலை ஒழித்து, கட்டிவைக்கும் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டுமா?........
- ஆனந்தவிகடனின் கவிதாபாரதி கூறுவதைப் படியுங்கள்.........----
சரவணன் குடும்பம் ஒரு சிற்றுண்டி விடுதியை ஆரம்பித்து நல்ல நிலைமைக்கு வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஜான்சியின் தாய்வழியில் எல்லோரும் பாரம்பர்யமான பணக்காரர்கள்.
எனினும் ஜான்சி குடும்பம் நடுத்தரவர்க்கமாகத்தான் இருந்தது. அவர்களைவிட வசதியாக இருந்தாலும் பின்புலப் பெருமைகள் எதுவுமில்லாத சரவணனுக்கு ஜான்சியை மணம் முடிப்பதை ஜான்சியின் உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு ஜான்சியின் பெற்றோரும் உடன்பட வேண்டியதாயிற்று.
ஜான்சியைப் பிரித்து வேறு ஓர் ஊரில் அடைத்துவைத்தனர். அவள் கல்லூரிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. அது செல்போன்கள் இல்லாத காலம். எனினும், எங்களுக்குள் ரகசியமாகக் கடிதப் போக்குவரத்துத் தொடர்ந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் ஜான்சியை மீட்டு சரவணனுக்கு மணம் முடித்துவைக்க முன்வந்தார்.
அதற்கான சூழலுக்காகக் காத்திருந்தோம். ஜான்சியின் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வுகளை எழுத அவளுக்கு அனுமதி கிடைத்தது.
உறவினர்கள் காரில் ஜான்சியை அழைத்துவந்து கல்லூரியில் விட்டுவிட்டு தேர்வு முடியும்வரை இருந்து அழைத்துச் சென்றனர். கடிதம் மூலமாகவே திருமணம் குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்படி இறுதித் தேர்வு எழுத வரும் ஜான்சி, தேர்வு எழுதும் அறைக்குள் செல்லாமல் கல்லூரியின் பின்புற வாசல் வழியாக வெளியே வர வேண்டும். அங்கு ஒரு காரில் அவளை அழைத்துச் சென்று ஒரு கோயிலில் திருமணத்தை நடத்திவிடுவது என்பது திட்டம்.
இதற்கு ஜான்சி விதித்த ஒரே நிபந்தனை... ‘என் கல்யாணத்துல நூறு பேராவது இருக்கணும். உரிய முறைப்படி கல்யாணம் நடக்கணும்.’
அளவு ஜாக்கெட் ரகசியமாகப் பெறப்பட்டது.
பட்டுப்புடவை, தாலி எல்லாம் வாங்கப்பட்டன. கல்லூரித் தேர்வின் கடைசி நாள். சமையல்காரர்கள் வரவழைக்கப் பட்டார்கள். உணவு தயாரானது. அந்த மலைக்கோயிலில் நூற்றுக்கும் மேல் நண்பர்கள். தவில், நாதஸ்வரம் என எல்லாமே ஜான்சியின் வரவுக்காகப் படி நோக்கிப் பார்த்திருந்தோம்.
கல்லூரியில் பின்வாசலில் கல்யாண வாகனம் காத்திருந்தது. ஆனால், ஜான்சி மட்டும் வரவே இல்லை.
ஆண்டுகள் பல கடந்த பின்பு, அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் அவளை மீண்டும் பார்த்தேன். அது ஜான்சிதான் என்று முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. என் பேரைச் சொல்லி “நீங்கள்தானே?’’ என்றாள்.
“ஆமாம்’’ என்றேன்.
“மழைக்கால சந்திப்பொன்று நமக்கிடையே நிகழாதா என்ற ஏக்கம் உனக்கில்லையா ஜான்சி...’ இந்தக் கவிதை நீங்க எழுதினதுதானே?’’ என்று கேட்டாள்.
எனக்குப் பதற்றமாகிவிட்டது.
“நீங்கள் ஜான்சியா?’’ என்றேன். அவள் தலையாட்டினாள்.
“நீங்க அந்தக் கவிதையை இன்னும் ஞாபகத்தில் வெச்சிருக்கீங்க. உங்க சரவணன் செத்துப் போயிட்டான் தெரியுமா?’’ என்று கேட்டேன். அவள் முகம் மாறத் தொடங்கியது.
அவள் இதழோரத்தில் கசந்த புன்னகை ஒன்று கண்ணீர்துளிபோல் துளிர்த்தது. “ஏன் அதோட நிறுத்திட்டீங்க. நீங்களும் சொல்லுங்களேன்... ‘நீதான் கொன்னுட்டே’னு. அந்தக் கணத்துக்கான பதில் என்னிடம் இல்லை.
“அவனைக் கொன்றது நீங்க எல்லாரும்தான்...’’ என்று ஜான்சி குரயலுயர்த்தினாள். நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
“அவன் கல்யாணம் பண்ணிக்காம கடைசி வரைக்கும் என்னையே நெனைச்சு உருகி உருகியே செத்துப்போனான். அதானே...’’ நான் சொற்களை இழந்து நின்றேன். அவள் தொடர்ந்தாள்.
“காதலிக்கும்போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப் படுத்தினீங்க. அதுக்குப் பிறகு வாழ்க்கையைத் தேடிப்போகும்போது அவனைக் கையைப் பிடிச்சுக் கூட்டிப் போகலையே. தோற்றுப் போன மைதானத்துல அப்படியே விட்டுட்டுப் போயிட்டீங்களே...’’
ஜான்சியின் சொற்கள் மனதை கிழிக்கத் தொடங்கியிருந்தன. கண்ணீர் உகுத்து கலங்கிநின்ற ஜான்சியின் கண்களில் சொற்களற்ற துயரம். தழுதழுத்த குரலில் உடைந்த ஒரு குடுவையைப் போல மாறிப்போயிருந்த ஜான்சியை நான் இன்று சந்தித்திருக்க வேண்டுமா? காலம் மழையின் அடர்த்தியோடு இறங்கிவிட்டதைப் போலிருந்தது.
ஜான்சி மீண்டும் பேசத் தொடங்கினான்.
“கடைசிப் பரீட்சைக்காக எப்பவும்போல கார்ல ஏறினேன். கார் காலேஜுக்குப் போகலை. ஒரு கோயிலுக்குப் போச்சு. பொண்டாட்டி செத்துப்போன சொந்தக்காரர் ஒருத்தருக்கு என்னை ரெண்டாம் தாரமா கட்டி வெச்சுட்டாங்க. அவருக்கு ஒரு குழந்தை. நாலு வயசு. முதல் நாளே என்னை ‘அம்மா’னு சொன்னா. அப்போதிலிருந்து நான் அம்மாவாயிட்டேன்.
நான் நல்லவளா.. கெட்டவளானு எல்லாம் தெரியாது. ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரியும். இன்னும் எத்தனை வருஷமானாலும் பொம்பளைங்களோடு பிரசவ வலியும், அவ மனசோட வலியும் உங்களுக்கு எல்லாம் புரியாது’’ _ ஜான்சி போய்விட்டாள். அந்த வார்த்தைகள் இன்னும் என்னோடு இருக்கின்றன.
காதல் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பரந்த ஒரு விளையாட்டு மைதானம். ஆட்டத்தின் முடிவை விளையாட்டு வீரனுக்கு உரிய பக்குவத்தோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திச் சென்றாள் ஜான்சி.
தோல்வியுற்றக் காதலுக்கு பெண்ணைத் தூற்றுவதும், விலகிப் போகிற பெண்ணைக் கொல்வதும், அமிலம் வீசுவதும் சமூகத்தின் பொதுப் புத்தி. பெண்ணின் பிரசவ வலியும் மனதின் வலியும் உணருகிற ஆணுக்காக இங்கே ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் உகுத்துக் காத்திருக்கிறாள். அந்த வலிகளை உணர்ந்த ஒரு காதலன் எந்நாளும் மரணத்தின், கொலையின் பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவன் விளையாட்டு வீரனின் லாகவத்தோடு வெற்றி _ தோல்விகளைக் கடந்து செல்கிறான். எல்லா காதலன்களுக்கும் விளையாட்டு வீரனின் மனோபாவம் வாய்க்கட்டும்.
நன்றி: ஆனந்தவிகடன் (05.04.2017)

Monday, March 27, 2017

உத்தரப் பிரதேசத் தேர்தல் உணர்த்துவதும் எச்சரிப்பதும்


 
- மஞ்சை வசந்தன்


உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவை உலகமே எதிர் நோக்கியது.  ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யும் தங்களது அடுத்தகட்டச் செயல் திட்டங்களை அத்தேர்தலே தீர்மானிக்கும் என்பதால், அதில் ஆறுமாதத்திற்கு முன்பிருந்தே அதிகக் கவனமும் அக்கறையும் காட்டியதோடு, அதற்கான அனைத்து வேலைகளையும் பெரும் பொருட்செலவில் திட்டமிட்டுச் செயல்படுத்தினர். மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் அவற்றை மிகஎளிதாகச் செய்து முடித்தனர்.

செல்லாத நோட்டுகளால் 4 மாதங்கள் மக்கள் சொல்லொண்ணாத் துயரமும், இன்னலும் இழப்பும் அடைந்தனர்.  மத்திய அரசையும் மோடியையும் கடுமையாக எதிர்த்தனர்.  கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லி, மக்கள் மனதை மாற்றினர்.  பணமற்ற பரிவர்த்தனை என்று இளைஞர்களை ஈர்த்தனர்.  ஓரளவு பணப்புழக்கம் வந்து, இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் பணத்தட்டுப் பாட்டால் பட்டப்பாட்டை மறந்தனர். மக்களின் மறதிதானே அரசியல் வாதிகளின் பலம். அது பி.ஜே.பிக்கு கிடைத்தது.

*பி.ஷே.பி. வெற்றிக்கான காரணங்கள்:*

*முலாயம் சிங் குடும்பச் சண்டை:*

முலாயம் சிங் மீதும் அவரது மகன் அகிலேஷ் மீதும் நம்பிக்கை வைத்துதான்  மக்கள்  சென்ற சட்டமன்றத் தேர்தலில் அவர்களை வெற்றிபெறச் செய்தனர்.  கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மக்களுக்கு நன்மை செய்து அவர்களை ஈர்க்க அகிலேஷ் தவறியது மிக முக்கியமான காரணம். தாழ்த்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினரை தம் பக்கம் ஈர்க்கும் செயல்திட்டங்களில் அகிலேஷ் அதிகக் கவனம் செலுத்தவில்லை.

ஆட்சிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் முலாயம் சிங், அகிலேஷ் (அப்பா, பிள்ளை) இடையேயான மோதல், கட்சிப்பிளவு மக்களை வெறுப்புக் கொள்ளச் செய்ததோடு, மக்கள் அவர்கள் மீது நம்பிக்கையிழக்கவும் காரணமாயின.

மதம் சாரா கட்சிகளின் பகையும் போட்டியும்

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, மதவாதம் போன்றவற்றை தீவிரமாய் எதிர்க்கக்கூடிய, சமூகநீதியில் அக்கறையுள்ள, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடிய கட்சிகளின் தலைவர்கள், தங்களுக்குள் தன்முனைப்பும், செறுக்கும் கொண்டு பிளவுப்பட்டு, மோதல் போக்கில் தேர்தலில் இறங்கியதால் வாக்குகள் சிதறிப்போயின.

*பீகாரில் நிதிஷ்குமார் செய்ததைப் பின்பற்றாமை:*

மதவாத பி.ஜே.பி கட்சியைத் தோற்கடிக்க அவர்களின் சதித்திட்டங்களை, சனாதன ஆதிக்கத்தை முறியடிக்க பீகாரில் நிதிஷ்குமார் அவர்கள், லல்லு பிராசாத் யாதவோடு அணி அமைத்து, பி.ஜே.பிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போகாமல் ஒருங்கிணைத்தது போல் உ.பி.யில் முலாயம் சிங்கும் அகிலேஷ் யாதவ்வும் செய்யத் தவறியது மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது.
சாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டு சேர்ந்து குறைந்த பட்சச் செயல் திட்டங்களை வகுத்துத் தேர்தலைச் சந்தித்திருப்பார்களேயானால் பி.ஜே.பி யை எளிதாகத் தோற்கடித்திருக்க முடியும்.

இதைக் கீழ்க்கண்ட பட்டியல் உறுதியாகக் காட்டுவதைக் காணலாம்: நடந்து முடிந்த உ.பி. சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
மேற்கண்ட பட்டியல்படி, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகள் ஒன்றுசேர்ந்து தேர்தலில் நின்றிருந்தால் எல்லா இடங்களையும் இக்கூட்டணி வென்று பி.ஜே.பி. படுதோல்வி அடைந்திருக்கும்.  இன்னும்  சொல்லப் போனால் ஒரு இடத்தில் கூட பி.ஜே.பி வெற்றி பெற முடியாத நிலை வந்திருக்கும்.

ஆக, மதம்சாரா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகளிடையே ஒற்றுமையின்மையால்தான் பி.ஜே.பி பெரும் வெற்றி பெற்றதேயல்லாமல் பி.ஜே.பி.யின் செல்வாக்கு வளர்ந்ததால் அல்ல. ஊடகங்கள் ஊதிப்பெருக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யே பெரும்பான்மை பெறும் என்பது உண்மைக்கு மாறான, மிகையான கற்பனை.

உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு பகுதிவாரியாகப் பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டால், பி.ஜே.பி பெற்ற வாக்குகளை விட பி.ஜே.பிக்கு எதிரான கட்சிகள் 10 முதல் 15 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளன.  இது மிகப் பெரிய வித்தியாசம் என்பதோடு, நாடாளுமன்றத் தேர்தலைவிட பி.ஜே.பி. தன் செல்வாக்கை இழந்துள்ளது என்பதும் புலப்படுகிறது.

*பி.ஜே.பி.யின் செல்வாக்கு 4% குறைவு*

புள்ளிவிவரக் கணக்கீடுகளின்படி பி.ஜே.பி. நாடாளுமன்றத்தில் பெற்றதைவிட சட்டமன்றத் தேர்தலில் 4% வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ளது இந்த உண்மையை உறுதி செய்கிறது.

*பி.ஜே.பி.யின் சூழ்ச்சிகள்:*

*முதல்வரை அறிவிக்காது மோடியை முன்னிறுத்தியமை*

மதவெறி கொண்ட யோகி ஆதித்யா தான் முதல்வர் என்று முன்கூட்டியே அறிவித்து பி.ஜே.பி தேர்தலில் நின்றிருந்தால், மக்கள் வெறுத்து ஒதுக்கியிருப்பர்.  அதைத் தவிர்ப்பதற்காக, முதல்வர் யார் என்று அறிவிக்காமல் மோடியென்ற முகமூடியைக் காட்டி, “வளர்ச்சியென்ற கவர்ச்சியை’’ உருவாக்கி மக்களை ஏமாற்றி வெற்றியைப் பெற்றனர்.

*ஆறுமாதங்களுக்கு முன்பிருந்தே மோசடிப் பிரச்சாரங்கள்:*

மக்களின் மனதை மாற்ற மூளைச்சாயம் ஏற்ற செய்ய இரண்டாண்டுகளாகவே முயன்ற பி.ஜே.பி கட்சியினர், கடந்த ஆறுமாதங்களாக மக்கள் மனத்தை மாற்றம் செய்வதிலே முழுக்கவனத்தையும் செலுத்தினர். இதற்கு இணையத் தளங்களை மிகவும் பயன்படுத்தினர்.

தொடக்கத்தில் ஒரு சிறிய அறையில் அமர்ந்து, பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என்று பலவகையில் தங்கள் கருத்துகளைப் பரப்பியவர்கள், பின்னர் லக்னோவில் ஒரு பெரிய கட்டடத்தையே முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் பொய்ப் பிரச்சாரங்களை, மோசடிப் பிரச்சாரங்களைச் செய்தனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்கள் தொடர்ந்து செய்து ஊக்கப்படுத்தினர்.

*பகுதிகளாகப் பிரித்து பரப்புரை:*

உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களை 92 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து, பின் சட்டமன்றத் தொகுதிகளாகவும், ஒன்றியப் பகுதிகளாகவும், அதன் பின் வாக்குச் சாவடிப் பகுதிகளாகவும் பிரித்து, மக்களிடம் பிரச்சாரம் மூலம் மூளைச்சாயம் ஏற்றினர்.

*ஆயிரக்கணக்கான பணியாளர்கள்:*

கிராமம் அளவில் பணியாற்ற 1,28,000 பேர் (ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் பேர்) இதற்காகப் பணியமர்த்தப்பட்டனர். இவர்களை தொடர்பு கொள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தகவல் தொடர்புப் பணியாளர்களை அமர்த்தினர்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5000 பணியாளர்களையும், 20 தொழில் நுட்ப வல்லுநர்களையும், வடிவமைப்பாளர்களையும், கேலிச்சித்திரம் வரையக் கூடியவர்களையும் பணியமர்த்தினர்.

*வாக்காளர் விவரம் சேகரிப்பு:*

மேற்கண்ட பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வாக்காளரின் பெயர், தொலைபேசி எண், முகவரி சேகரிக்கப்பட்டன.

இம்முயற்சிகளின் மூலம் 1 கோடியே 30 லட்சம் பேர் தொலைபேசி இணையதள வழி வாடிக்கையாளர்களாக்கப்பட்டனர்.

...*வாட்ஸ் ஆப் வளர்ச்சி*....

5000 வாட்ஸ் ஆப் குழுக்கள் கொண்டு தொடங்கப்பட்ட இப்பிரச்சாரப் பணி ஆறுமாத காலத்திற்குள் 9000 குழுக்களாக வளர்ச்சியடைந்தது.  ஒவ்வொரு குழுவிலும் 150 தொலைபேசிப் பயனாளர்கள் இணைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு நாளும் இவர்களால் பரப்பப்படும் பொய்செய்திகளை, ஏமாற்றுச் செய்திகளை, மத வெறியூட்டும் கருத்துக்களை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் படித்தனர்.

பொய்ச் செய்திகள்:

¨           இந்துப் பெண்களை இஸ்லாமியர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர்.
¨           இந்து சாமியார்கள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் தாக்குதல். சாமியார்கள் காயம்.
¨           அகிலேஷ்யாதவ் இஸ்லாமியர்களை அரவணைத்து இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
¨           இந்துக்கள் எண்ணிக்கை குறைய இஸ்லாமியர் மக்கள் தொகை கூடிவருகிறது!
¨           இந்துக்கள் நாட்டில் இஸ்லாமியர்களுக்குத் தனிச்சலுகையா?
¨           இந்துக்கோயில்களைத் தகர்க்க இஸ்லாமியர்கள் சதி!
என்பன போன்ற பொய்யான வதந்திகளை ஒவ்வொரு நாளும் பரப்பினர்.

ஷே.பி.எஸ் ரத்தோர்:

இவர் தகவல் தொடர்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, இவர் கூறும் செய்திகளை, இரவு, பகல் எல்லா நேரமும் மக்களைச் சென்றடையும்படி பரப்பினர்.  இளைஞர்கள் உட்பட பலரும் இவர்கள் பரப்பும் செய்திகளையே தொடர்ந்து பார்க்கும்படியாக, பொய்யான கருத்துக்களை, மக்கள் தங்களை ஏற்கும்படியாகத் தொடர்ந்து பரப்பிக் கொண்டேயிருந்தனர்.

---*சாதிக் குழுக்களைத் தன் வயப்படுத்தினர்*---

தாழ்த்தப்பட்டவர்களின் குழு மோதலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.  தமிழகத்தில்கூட தற்போது புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியை வளைத்து வருகின்றனர்.  பிற்படுத்தப்பட்டவர்களில் ஒருசிலரை யாதவர்களுக்கு எதிராய்த் தூண்டிவிட்டனர். யாதவர் எதிர்ப்புணர்ச்சியில் அவர்கள் பி.ஜே.பியை ஆதரிக்கும்படிச் செய்தனர்.

-----*உ.பி. தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?*----

¨           பி.ஜே.பி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 4% வாக்குகளைக் குறைவாகவே சட்டமன்றத் தேர்தலில் பெற்றுள்ளது.

¨           எதிர்கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதாலே தோற்றன.

¨           எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டி யிட்டிருந்தால் 403 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பர்.  பி.ஜே.பி. 403 தொகுதிகளிலும் உறுதியாய்த் தோற்றுப் போயிருக்கும்.

¨           பி.ஜே.பி. செல்வாக்கு வளரவில்லை. மாறாக பி.ஜே.பி.க்கு எதிரான வாக்காளர்களே அதிகம். எதிர்கட்சிகளின் ஒற்றுமை யின்மையும், அகிலேஷ் யாதவின் சாதனையில்லா ஆட்சியுமே பி.ஜே.பி.யின் வெற்றிக்குக் காரணங்கள்.

....*எதிர்க் கட்சிகள் செய்யத் தவறியவை*...

¨           சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மூன்றும் ஒன்று சேர்ந்து வலுவான கூட்டணி அமைந்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறின.
¨           முதல்வர் பதவி சமாஜ்வாடிக்கு, துணை முதல்வர் பதவிகள் காங்கிரசுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் என்று ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அவ்விதம் செய்யவில்லை.

¨           இம்மூன்று கட்சிகளும் சேர்ந்த கூட்டு மந்திரி சபை அமைத்திருக்கவேண்டும். அதற்கு ஒன்று சேரவில்லை.

இவற்றைச் செய்து தேர்தலில் நின்றிருந்தால் 403 தொகுதிகளையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றி யாருக்கும்; பி.ஜே.பி எல்லாத் தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.  எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நின்று கேவலமாய் தோற்றதற்கு மாறாய், துணைமுதல்வர், மந்திரி சபையில் இடம், அதிகப்படியான சட்ட மன்ற உறுப்பினர்கள் என்ற பெரும் பயனைப் பெற்றிருக்கலாம். அதுமட்டுமல்ல மதவாத பி.ஜே.பி கட்சியை அறவே வீழ்த்தியிருக்கலாம்.

---*உத்திரபிரதேசத் தேர்தல் எச்சரிப்பது என்ன?*---

மதவாத சக்திகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இல்லையேல்  அனைவர்க்கும் தாழ்வு! என்பதையே இத்தேர்தல் எச்சரிக்கிறது. உத்திர பிரதேசத்தில்  பி.ஜே.பி வெற்றி என்பது அந்த மாநிலத்திற்கான விளைவுகளை மட்டும் ஏற்படுத்துவது அல்ல. அது ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாதக விளைவுகளை, ஆதிக்கத் திணிப்புகளை அத்து மீறல்களை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

அடுத்துவரும் குடியரசுத் தேர்தலில் மதவாத சக்திகளின் கையாளை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வர்; பி.ஜே.பி யின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கைக் கூடும்; அதன்மூலம் அவர்கள் நினைக்கின்ற சட்டங்களை இயற்றி தங்களின் மதவாதக் கொள்கைகளை, செயல் திட்டங்களை நிறைவேற்றுவர்.

அதன்வழி கடந்த 70 ஆண்டுகளாக மீட்டெடுத்த உரிமைகள், சமத்துவம், வளர்ச்சி, எழுச்சி எல்லாம் ஒடுக்கப்படும்.  ஆரிய பார்ப்பன ஆதிக்கமும் , சமஸ்கிருத ஆதிக்கமும் மேலோங்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர், கிராமப்புற மாணவர்கள் ஒதுக்கப்படுவர். வேலைவாய்ப்பு, சமூகநீதி பறிபோகும்.

---*இனி உடனே செய்ய வேண்டியவை*----

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுள்ள கட்சிகள் ஒன்று  சேர்ந்து, வலுவான கூட்டணியை பி.ஜே.பி.க்கு  எதிராய் அமைக்க வேண்டும். தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இளைஞர் களிடம் அந்தந்த மாநில மொழிகளில் பரப்பிட வேண்டும்,. ஊர்தோறும் படிப்பகங்களை உருவாக்க வேண்டும். இந்தியாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் மதவாத சக்திக்கு எதிராய் அமைப்பு ரீதியாய், இயக்க ரீதியாய், கொள்கை ரீதியாய் இயங்குவதோடு, இந்தியாவிற்கே வழிகாட்டியாய் இருக்கக் கூடிய திராவிடர்  கழகத்தின் வழிகாட்டுதல்களை தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் ஏற்று, அந்த வழிகாட்டுதலின் படி செயல் திட்டங்கள், போராட்டங்கள் என்று உடனே முன்னெடுப்பது ஒன்றே மதவாத சக்திகள் வீழவும் மற்றவர்கள் வாழவும் வழிவகுக்கும் எனவே, முதற்கட்டமாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்டோர் தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடி, கலந்து ஆலோசித்து, தீர்மானங்கள் வடிவமைத்து, அவற்றை நிறைவேற்ற மாபெரும் மாநாட்டை டில்லியில் கூட்டி ஓர், எழுச்சியை உருவாக்க வேண்டும். வலுவான அணி உருவாக்கப்பட வேண்டும். 

கம்யூனிஸ்ட்கள் பார்வையாளராய் நின்று பரிகசிக்கப்படும் நிலையைத் தவிர்த்து, காங்கிரசுடன் கூட்டுசேர்ந்து, மதவாத சக்திகளை முறியடிக்க முந்தி நின்று முயற்சிக்க வேண்டும். 

தவறினால், அவர்கள் அரசியல் செய்வதில் அர்த்தமே இல்லை! ஒரு முற்போக்கு இயக்கம் கேலிக்குரியதாகும். 
எச்சரிக்கை!

Tuesday, March 21, 2017

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.
தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?
தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.
நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?
மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?
தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?
உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.
உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!
உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!
உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!
உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!
அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள 

கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.

இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் 

இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.
ஏசு பிறப்பை வைத்து கணக்கீடு என்பது சரியன்று. காரணம் ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.
மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?
தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கலைஞர் இதை நடைமுறைப்படுத்துவார் என்று தமிழர்கள் குறிப்பாக அயல்-நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?

சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!
1971
ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.
அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா? அதை உறுதி செய்த பெருமையும் வழக்கம் போல் கலைஞரையே சேரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.


தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்-கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்-சக்கர முறையில் இருப்-பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு அறிவியல் தமிழ் மண் மரபு மாண்பு பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே தமிழ் அறிஞர்கள் சான்-றோர்கள் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்-தார்கள்.

இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 193531=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி-ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)
-
. வேம்பையன்


நன்றி: உண்மை(ஜனவரி 16-30, 2007)