அரசியல்

Tuesday, December 29, 2015

துக்ளக் இதழின் பச்சைப் பார்ப்பன பித்தலாட்டம்

06.01.2016 துக்ளக் இதழின் முன் அட்டையில் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அர்ச்சகராக பூசைச் செய்வது போலவும், அதைக் கண்டு கலைஞரும் பேராசிரியரும் மகிழ்வது போலவும் கருத்துப்படம்.
இதைவிட ஓர் அயோக்கியத்தனம்; அற்பத்தனம், பித்தலாட்டம் புத்தி வேறு இருக்க முடியுமா?
இதுவெல்லாம் ஓர் ஏடு; இதற்கு வாசகர் மாநாடு; பாராட்டு, ஓகோ... ஓகோ.. ஆதரவு. இப்போதெல்லாம் பார்ப்பான் பச்சையாக கூச்சநாச்சமின்றி பித்தலாட்டம் செய்கிறான்! அதன் அடையாளம்தான் இது!
கொஞ்சங்கூட பத்திரிகா தர்மம் இல்லாமல், அறிவு நாணயம் இல்லாமல், நியாய உணர்ச்சியில்லாமல், உண்மைகளை மறைக்க, நையாண்டி முயற்சி! இப்படியும் ஒரு பிழைப்பா?
அற்பத்தனத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் ஓர் அளவு வேண்டாமா?
கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. ஆனால், எல்லா ஜாதியினருக்கும் அர்ச்சகராக உரிமை உண்டு என்பது தி.க.வின் சமூகநீதிக் கொள்கை.
அச்சமூக நீதிக்குப் போராடி, மக்களின் உரிமையை மீட்டுத் தரவேண்டியது சமூக இயக்கத்தின் கடமை. அதில் வெற்றி பெற்றுள்ளது திராவிடர் கழகம்.
ஜாதி ஒழிப்பின் இறுதிக் கட்டம் உறுதிப்பட்டுள்ளது!
அதைப் பொறுக்க முடியாமல், தங்கள் ஆதிக்கம் பறிபோகிறதே என்ற வயிற்றெரிச்சலில், சம்பந்தா சம்பந்தம் இல்லாத கருத்துப் படம்.
கிறுக்குப் பிடித்தவனெல்லாம் கீழ்ப்பாக்கத்திற்கு போகாமல் துக்ளக் அலுவலகத்தில் உட்கார்ந்து பேனா பிடிப்பதன் விளைவு அல்லவா இது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார் கேட்டதும், கலைஞர் சட்டம் இயற்றியதும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் போராடி வெற்றிபெற்றதும் இவர்கள் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கா?
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள எம் மக்களுக்கு அர்ச்சகர் உரிமை வேண்டும்! என்று போராடிப் பெற்றதில் என்ன கொள்கைத் தவறு? எதற்கு நையாண்டி?
சூடு சொரணையிருந்தால் அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவேண்டும். அதைவிடுத்து கிறுக்குத்தனமாக கேலி செய்வது மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனமல்லவா? மக்களை ஏமாற்றும் மோசடி வேலையல்லவா? வயிற்றெரிச்சலின் வடிகால்தானே இந்தக் கேலிச்சித்திரம்.
கீழ்ப்பாக்கத்துக் கிறுக்கர்களிடம் தமிழர்களே எச்சரிக்கை! கிறுக்கர்களை விரட்டுங்கள்!

No comments:

Post a Comment