அரசியல்

Tuesday, December 29, 2015

இந்த மோ(ச)டியை எப்படி நம்புவது?


”இந்தியா எனது மதம்! அரசியல் சாசனம் புனிதநூல்!” இப்படி அறிவித்துள்ள மோடியும் அவர் வந்த இயக்கமும் இதற்கு முற்றிலும் எதிரானவை இதோ அதற்கான ஆதாரம் :......
இந்திய அரசமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணயசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, பாஜகவின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ், தனது அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் தலையங்கம் எழுதியது. இந்த அரசமைப்புச் சட்டத்தில் பாரதீய விஷயங்கள் எதுவுமே இல்லை; மனுஸ்மிரிதியில் இருந்து எந்த விஷயத்தையும் இந்த சட்டம் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டது என அங்கலாய்த்துக் கொண்டது.
இந்தியா, குடியரசு நாடாக 1950 ஜனவரி 26- அன்று அறிவிக்கப்பட் டது. அதற்கு முந்தைய நாளான 25.1.1950 அன்று, ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆர்கனைசர் ஏட்டில் சங்கர் சுப் பையா அய்யர் என்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கட்டுரை வெளியிடப் பட்டது. அதில், மனுஸ்மிரிதியை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சவர்க்காரும், கோல்வால்கரும் மனுஸ்மிரிதியைத்தான் கொண் டாடினார்கள். இந்த நாட்டில் சிறப்பான சட்டத்தைத் தந்தவன் மனு என்று கூறியவர் கோல் வார்க்கர்.
தான் எழுதிய புத்தகம் ஒன்றை தனது குரு கோல்வால்கருக்கு சமர்ப் பணம் என்று கூறியவர் இன்றைய பிரதமர் மோடி.
கோல்வால்கரை குருவாக கொண்டவரும் மனுதர்மத்தை சட்டமாக்க துடிக்கும் இயக்கத்தை சேர்ந்தவரும் ஆன மோடி இப்படி முழங்குவதை எப்படி நம்புவது.
இது ஒரு சந்தர்ப்பவாத முழக்கம்
இந்தியர்களே எச்சரிக்கை
இளைஞர்களே எச்சரிக்கை

No comments:

Post a Comment