அரசியல்

Tuesday, December 29, 2015

இதுதான் தினமணியின் திரிபு வாதம்!

இதுதான் தினமணியின் திரிபு வாதம்!
மாலன் கட்டுரையும் மதியின் கார்ட்டூனும்................................

இந்துத்துவாவாதிகளின் கையில் ஆட்சி இருப்பதால், மதவெறியர் காளின் பாசிசப் போக்கு எல்லை மீறிச் செல்வதைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள், திரைத்துறையினர் பேசுகிறார்கள், கண்டிக்கிறார்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
இவர்களின் உண்மையான உணர்வைப் புரிந்துக்கொள்ளாமல், மதவெறிக்கூட்டத்தின் ஆபத்தை உணர்ந்து அதைக் கண்டிக்காமல், ஆரிய பார்ப்பனர்கள், தங்கள் கையில் பத்திரிகைகள் இருப்பதால், உண்மைகளை மறைத்துத் திரிபுவாதம் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டு இன்றைய (28.11.2015) ”தினமணி” வந்துள்ள மாலன் கட்டுரையும் மதியின் கார்ட்டூனும்.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், பி.ஜே.பி. கட்சியினருக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் தான் சகிப்புத் தன்மையில்லையென்று குற்றம்சாட்டி எதிர்க்கப்படுகிறதே ஒழிய, இந்திய மக்களுக்கு சகிப்புத் தன்மை இல்லையென்று எவன் சொன்னது? இந்திய மக்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லையென்று சொல்வது போல மாற்றி; ஏமாற்றி எழுகின்றனர்.
மக்களை ஏமாற்ற இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை இவர்கள் எடுத்துக்காட்டி, நல்லவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்? இதுதான் ஆரியச்சூழ்ச்சி; ஆரிய திரிபுவாதம். இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை மதிக்கிறோம். இந்துத்துவா வாதிகளின் சகிப்பின்மையை எதிர்க்கிறோம்! மாலனும் மதியும் ஏய்க்கப்பார்க்கிறார்கள் இளைய தலைமுறையே எச்சரிக்கை!
பாதிக்கப்படுகிறவர்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பனர்கள், வன்முறையாளர்களை இந்த அளவிற்குக் கண்டிக்காதது ஏன்?
தாத்ரி சம்பவம், கல்புர்கி கொலையின் நோக்கமும், வெறியும் இலங்கையில் நடந்த இனக்கொலையும் ஒன்றா? இரண்டையும் முடிச்சுப்போட்டு குழப்பப்பார்க்கிறார்கள். இதுதான் ஆரிய நரித்தனம்
கார்ட்டூனிஸ்ட் கூட கட்டுரை எழுதுகிறார்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment