அரசியல்

Tuesday, December 29, 2015

உலகில் ஒப்பார் இல்லா பெரியார்..............

94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாள்கள் வாழ்ந்தவர்
8200 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தவர் அதில் அயல்நாடுகளில் மட்டும் 392 நாள்கள்
மொத்த பயணத் தொலைவு 13,19,662 கி.மீ
ஒப்பீட்டளவில் இத்தொலைவு பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல் 3.43 மடங்கு.
பங்கேற்ற பிரச்சாரக் களங்கள் 10,700
கருத்துரை ஆற்றிய காலம் நாள்கணக்கில் 891
மணிக்கணக்கில் 21,400
இந்த சாதனைகளை மூத்திரச் சட்டியுடன் பயணம் செய்து சாதித்தார்.
பெரியாரின் பேச்சை ஒலிப்பரப்பினால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒளித்துக் கொண்டே இருக்கும்.
தன் சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்கள் நலத்துக்கே கொடுத்தவர். பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள்.
இறப்பதற்கு முன் ஆற்றிய உரையில் சாதி இழிவை அறவே ஒழிக்க கருவறைக்குள்
சூத்திரர்களை அர்ச்சகராக்கி தீர வேண்டும் என்று முழங்கியவர்
அவர் எண்ணம் இப்போது ஈடேறியுள்ளது.
உலகில் பெரியாருக்கு இணை பெரியாரே!
அவரது நினைவுநாளில் ஜாதி மதம் ஒழிந்த சமத்துவ சமுதாயம் படைக்க உறுதி ஏற்போம்!
வாழ்க பெரியார்!

No comments:

Post a Comment