அரசியல்

Tuesday, January 9, 2018

ஊடக மோசடி!


குறிப்பாக ஊடகங்களைக் கேட்க விரும்புகிறோம்,. உங்களுக்கெல்லாம் மாண்பு, ஊடக தர்மம், உளச்சான்று ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் உயர்த்திப் பிடிக்க நினைத்தால், யாரை வேண்டுமானாலும் சரித்திர நாயகனாக்குகிறீர்கள்!
நீங்கள் ஒழிக்க நினைத்தால் சரித்திர சாதனைகளைக்கூட சத்தமின்றி மறைக்கிறீர்கள்!
நேரடியாகவே கேட்கிறோம், இரஜினிகாந்த் திரும்பினால் செய்தி, தும்மினால் செய்தி, கை தூக்கினால் செய்தி, காது குடைந்தால் செய்தி!
கேவலமாக இல்லை! ஊடகங்களுக்கென்று ஓர் உயர் நோக்கு வேண்டாமா?
கமலகாசன் அரசியலுக்கு வருவேன் என்றபோது, இந்த ஆர்ப்பாட்டம் இல்லையே! அவரும் பெரிய நடிகர்தானே!
ஆரிய ஆதிக்கத்திற்கு துணை போகிறவர்களைத் தூக்கிப் பிடிப்பீர்; எதிர்ப்பவர்களை மறைப்பீர். இதுதானே உங்கள் கார்ப்பரேட் பார்முலா?
பரபரப்பும், பார்ப்போர் எண்ணிக்கையும், பணம் சேர்ப்பதும்தான் குறிக்கோள் என்றால், சமுதாயத்தின் விழிப்புக்காக உளச் சான்றுடன் எப்போது உங்கள் கடமையை ஆற்றப் போகிறீர்கள்?
நீங்கள் எல்லோரையும் கேள்வி கேட்கிறீர்கள். இக்கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லங்கள்!
===========




No comments:

Post a Comment