அரசியல்

Monday, January 22, 2018

மத்திய அரசா? மடப்பள்ளியா?

மத்திய அரசா?
மடப்பள்ளியா?
நீட் தேர்வு பாடத்திட்ட மோசடி!

-
மஞ்சை வசந்தன்
மத்தியில் ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை. சட்டம், நீதி எதுவும் பின்பற்றப்படுவதில்லை. ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைக் கொண்டுவர எதையும் செய்து வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களையும், ஏழைகளையும் முன்னேற விடாமல் எல்லா வகையிலும் சதி செய்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தையும், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறையையும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்தி எவரையும் அடக்கி அச்சுறுத்தி பழிவாங்குகின்றனர். அமித்ஷா போன்ற தங்களுக்கு வேண்டியவர்களை பல மோசடிகளைச் செய்து காப்பாற்றுகின்றனர்.
நான்கு நாள்களுக்கு முன் நீட் தேர்வுக்கரிய வினாக்கள் மாநிலப் பாடத் திட்டத்திலும் கேட்கப்படும் என்று அறிவித்தனர். நேற்று சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்படும் என்கின்றனர்.

இது என்ன சமையல் அறையா?(மடப்பள்ளியா?) பொங்கல் வேண்டாம், புளியோதரை செய்வோம் என்று முடிவு செய்ய! ஆரிய பார்ப்பான் என்ன நினைக்கிறானோ, அவனுக்கு எது நல்லதோ அதையே செய்வோம் என்றால் அழிவு விரைவில் நெருங்குகிறது என்று பொருள். இரு வகையான பாடத் திட்டம் இருக்கும்போது இரு பாடத் திட்டத்தில்தானே கேள்வி கேட்கப்பட வேண்டும். சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் மட்டுமே கேள்வி என்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா? நீட் தேர்வே மோசடி! இது அதைவிட பெரும் மோசடியல்லவா?
அநியாயம் உச்சத்துக்குப் போனால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும்! எச்சரிக்கை! எச்சரிக்கை!
====

No comments:

Post a Comment