அரசியல்

Thursday, January 4, 2018

தண்ணியடித்து தடுமாற்றத்தில் உளறுகிறாரா தமிழருவி மணியன்!


Image may contain: text
 
"திராவிடர் கழகம் பெரியார் கொள்கையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை!" என்கிறார் இந்த மணியன்!

பெரியார் இறப்பிற்குப் பின் அன்னை மணியம்மையாரும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் பெரியார் கொள்கைகளைப் பரப்பவும், இலக்குகளை அடையவும் எவ்வளவு பணிகள் செய்திருக்கிறார்கள் என்று உமக்குத் தெரியுமா?

இன்று உலக அளவில் பெரியார் கொள்கை கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் மறைத்துப் பேசுவதுதான் உம் நேர்மையா?

இன்றைக்கு பி.ஜே.பி. தமிழகத்தில் அடியூன்ற முடியாமல் தடுப்பது திராவிடர் கழகத்தின் பணிதான் என்பதை எதிரிகூட ஒத்துக் கொள்வானே!

இன்றைய காட்சி ஊடகங்களில் விவாதப் பொருளே தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கைகள்தான் என்பதை மறைத்துப் பேசுவதுதான் உம் ஆன்மீகமா?

பெரியார் கொள்கைகளைப் பரப்ப எத்தனை மேடைகள், எத்தனை நூல்கள், எத்தனை மாநாடுகள், எத்தனை பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற பட்டியல் வேண்டுமா?

ஒரு இயக்கம் நடத்தும் நீர், தலைமைக்கு ஆள்தேடி தோளில் தூக்கி நிற்கும் கேவலமான செய்லைச் செய்துகொண்டு, கீழ்த்தரமான, தப்பான செய்திகளைப் பரப்புவது யோக்கியமான செயலா?

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில வரலாற்றுப் பிழை செய்து, மதவெறி கூட்டத்திற்குத் துணை நின்ற தமிழருவி மணியன்.

மீண்டும் அதே பிழையைத் தற்போது செய்து வருவது குற்றமல்லவா?.

ஊழல், கொள்ளை ஒழிக்க, எப்படிப்பட்ட ஒரு "உத்தமரைத்" தேடிக் கண்டுபிடித்திருக்கிறீர்?

அவர் எப்படி உத்தமர் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?

அப்படியென்றால், தமிழருவி மணியன் உத்தமர் இல்லையா? உத்தமர் என்றால் அவரே அக்காரியத்தை செய்ய வேண்டியதுதானே! ஆள் பிடிப்பது ஏன்?

உத்தமர்களை மக்கள் ஏற்பதாய் இருந்தால் நீரே தலைமை தாங்கலாமே? நீர் உத்தமர் இல்லையா?

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
========

No comments:

Post a Comment