அரசியல்

Monday, January 29, 2018

வேலை கேட்கும் இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறார் மோடி! இளைஞர்கள் கொந்தளிப்பு!




- மஞ்சை
வசந்தன்

மோடி
பிரதமரானால் வளர்ச்சி வானளாவ உயரும்! வேலைவாய்ப்பு பெருகும்! எல்லோருக்கும் வருவாய் வந்துசேரும்! என்று அத்தனை ஊடகங்களும் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்தனர். இளைஞர்களும் நம்பி வாக்களித்து பி.ஜே.பி.யை ஆட்சியில் அமர்த்தினார்கள். மூன்றரை ஆண்டுகால மோடி ஆட்சியில்,

வளர்ச்சி வந்ததா?
வேலைவாய்ப்பு பெருகியதா?
எல்லோருக்கும் வருவாய் வந்ததா?

வளர்ச்சி பாகிஸ்தானைவிட கீழ்நிலை! புதிய வேலைவாய்ப்பிற்கு மாறாய் வேலைகள் பறிப்பு. சிறுதொழில் குறுதொழிலை முடக்கி, கார்ப்பரேட் கம்பெனிகளை வளரவிட்டதால், அடித்தட்டு, நடுத்தர மக்கள் வருவாய் இழந்து வறுமை!  

வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி வரும் என்றாயே மோடி? எதுவும் இல்லையே, எல்லாம் மோசமாய், கீழாய்ப் போயிற்றே! என்று மோடியிடம் கேட்டால், பகோடா விற்றால், பஜ்ஜி விற்றால் பணம் வரும் என்கிறார்

இதைவிட இளைஞர்களை யார் கேவலப்படுத்த முடியும்? இளைஞர்களே இந்த ஆட்சியை அகற்ற உறுதி கொள்வீர்! இளைஞர்களின் எதிர்காலம் இந்த ஆட்சி அகற்றப்படுவதில்தான் உள்ளது.
====

No comments:

Post a Comment