அரசியல்

Thursday, February 25, 2016

இளைஞர்களே இவரைப் பின்பற்றுங்கள்!




பீகாரின் ககாரியா என்ற குக்கிராமத்தில் சாதாரண வெல்டிங் கடைக்காரரின் மகனாகப் பிறந்த சிங், அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகியிருக்கிறார். ஆண்டுக்கு 1 கோடியே 2 லட்ச ரூபாய் சம்பளம். கரக்பூர் அய்.அய்.டியில் படிக்கிறார் இவர். ”என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியிலேயே ஓடி விட நினைத்தேன். 

‘கிராமத்து சூழலில் வளர்ந்தவர்களாலும் அய்.அய்.டி தரத்தில் படிக்க முடியும் என இரண்டு பேராசிரியர்கள் நம்பிக்கை அளித்தார்கள். அவர்களும், 20 ஆண்டுகளாக எனக்கான கனவைக் கண்ட என் அப்பா சந்aதிரகாந்த் சிங்கும்தான் இந்தப் பெருமைக்குக் காரணம்” என்கிறார் வாத்ஸ்ல்ய சிங். எல்லா தடைகளையும் தாண்டி ஒரு கிராமத்து இளைஞனால் சாதிக்க முடியும் என்பதற்கு புதிய ரோல் மாடல், வாத்ஸல்ய சிங்.செளகான்.

No comments:

Post a Comment