அரசியல்

Wednesday, February 17, 2016

செல்பேசி சில எச்சரிக்கைகள்



1. இரவு முழுக்க செல்பேசியை சார்ஜில் போடக்கூடாது. அதற்குரிய நேரம் மட்டுமே சார்ஜில் வைக்க வேண்டும். அதிக நேரம் போடுவது ஆபத்துக்கு அடிப்படைக் காரணம். சார்ஜில் இருக்கும் போது செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. சார்ஜில் இருக்கும் போது சூடாக இருக்கும் அப்போது பயன்படுத்தினால் வெடிக்க வாய்ப்புண்டு.

2. செல்பேசியை அழுத்தக்கூடாது. அதிக அழுத்தம் வெடிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

3. செல்பேசியை சட்டைப்பையில் குறிப்பாக இடது பையில் வைக்காதீர்கள். அது இதயத்திற்குக்கேடு.


 4. செல்பேசியை இடுப்புப்பகுதிக்கு முன்புறம் வைக்காதீர்கள். அது ஆண்களுகளின் உயிரணு உருவாகும் விதைப் பகுதியை பாதிக்கும். உயிரணுக்களையும் பாதிக்கும். இது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். பேன்ட்டின் பின்புறம் உள்ள பையில் வையுங்கள்.

5. செல்பேசியை காதுக்களுக்கு நீண்ட நேரம் பேசக்கூடாது. நீண்டநேரம் பேச காதுக்கருவியைப் பயன்படுத்துங்கள்.

6. IMEI ((International Mobile Equipment Identity) எண் உள்ள செல்பேசியை மட்டும் வாங்குங்கள். இல்லாதை வாங்காதீர்கள். செல்போனில் *#06# - அழுத்தினால் IMEI எண்வரும். அது நாம் பெறும் இரசீதில் குறிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

 7. பாட்டரி, சார்ஜர் போலியில்லாமல் அசலாக வாங்குங்கள்.

8. சூடான இடங்களில் செல்பேசியை வைக்கக்கூடாது. சார்ஜில் இருக்கும் போது செல்பேசியில் விளையாடக்கூடாது.

9. தலைக்குப்பக்கத்தில் செல் பேசியை வைத்துக் கொண்டு படுக்கக்கூடாது. கால்பக்கம் வையுங்கள்.

10. ஆன்லைன் மூலம் செல்பேசியை வாங்குவதைத் தவிருங்கள். விளம்பரக்கவர்ச்சியில் ஏமாறாமல், தரமானவற்றையே வாங்குங்கள்.

No comments:

Post a Comment