அரசியல்

Tuesday, February 2, 2016

சிறுநீரகக் கல் நீங்க சிறந்த மருந்து!


 தற்காலத்தில் பரவலாகக் காணப்படும் நோய் இது.
 

 இதை நமது நாட்டு மருத்துவத்தில் எளிதாய் அகற்றலாம்.

நெருஞ்சிக்காய், நெருஞ்சி இலை, கொத்தமல்லி (தனியா), இம்மூன்றையும் நீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் சூடு ஆறியதும் வடிகட்டி, 100 மில்லி அளவிற்கு காலை வெறும் வயிற்றில் 48 நாள்கள் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் நீங்கும்.

 சிறநீரக அழற்சி குணமாகும். உடலின் சூடு தணியும்.
வாழைத்தண்டு வாரம் இருமுறை பொறியல் செய்து சாப்பிடுங்கள்.
வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை சாப்பிடுங்கள்.
கீரை, தக்காளி அதிகம் சாப்பிட வேண்டாம். உலக அளவில் சிறுநீரகக் கல் அகற்ற நெருஞ்சிதான் முதல்தர மருந்து.

 சிறுநீரகக் கல் ஹோமியோ மருந்திலும் எளிதில் கரையும்.

எனவே, ஆங்கில மருந்துகளை அதிகம் சாப்பிடுவதோ, அறுவை சிகிச்சை செய்து அதிகப் பணம் செலவிடுவதோ தேவையில்லை.

 முடிந்த அளவு ஆங்கில மருந்துகளைத் தவிர்த்து சித்த மருந்து, ஹோமியோ மருந்துகளை சாப்பிட்டு, பக்க விளைவை தவிருங்கள், பணச் செலவையும், உடல் தொல்லையும் குறையுங்கள்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment