அரசியல்

Thursday, September 24, 2015

இடஒதுக்கீடு பிச்சையா? உரிமையா?


பிச்சையென்று பிரச்சாரம் செய்யும்
அயோக்கியர்களே பதில் சொல்லுங்கள்!

 “நான் ஏழை எனக்குப் பிச்சைப்போடுங்கள். நான் தாழ்த்தப்பட்டவன் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள். இரண்டிற்க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

 உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். அதை விட்டுவிட்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நாம் இதுபோல் சலுகைகள் எதிர்பார்த்தால் தான் தாழ்ந்த ஜாதியென்று நசுக்கப்படுவோம்.”

 என்று ஒரு அரை வேக்காடு அல்லது ஒரு மோசடிப்பேர்வழி கருத்துக் கூறியுள்ளார்.

 எதன் வழிதெரியுமா? Dinamalar Andrrind app வழி!

 எங்கிருந்து தெரியுமா? பெங்களூரிலிருந்து.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான, நயவஞ்சகமான, சூழ்ச்சியான பிரச்சாரத்தை ஆரியப்பார்ப்பனர்கள் அல்லது அவர்கள் கைக்கூலிகள் தற்போது நாடெங்கும் செய்து வருகின்றனர்.

 இடஒதுக்கீட்டின் தத்துவமே தெரியாத அரை வேக்காடுகள் அல்லது மோசடிபேர்வழிகள் இடஒதுக்கீட்டைப் பிச்சையென்கின்றனர்.

 அப்படிப்பட்ட அடிமுட்டாள்களுக்கு, அயோக்கியர்களுக்குச் சொல்கிறோம். பரம்பரைச் சொத்தில் பிள்ளை பங்குகேட்பது போன்றது இடஒதுக்கீடு!

 பிள்ளை பங்குகேட்பது பிச்சையா? உரிமையா? சூடு சொரணை, நாணயம் இருந்தால் பதில் சொல்லும்!

இடஒதுக்கீடு ஒழிந்தால் ஜாதி ஒழியுமா? இழிவு நீங்கிவிடுமா?

இடஒதுக்கீடு வருவதற்கு முன் ஜாதி ஒழிந்ததா?

 இடஒதுக்கீடு இல்லாத போதுதானே ஜாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடின?
இடஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்புப் பெற்று அடித்தட்டு ஜாதியினர் மேலெழுந்ததன் விளைவுதானே கலப்புமணம், ஜாதிஒழிப்பு மெல்லமெல்ல நடைமுறைக்கு வருவதெல்லாம். எந்த ஜாதியால் ஒடுக்கப்பட்டார்களோ அந்தஜாதியின் அடிப்படையில் உரிமை தந்து தானே உயர்த்தமுடியும்?

 படித்த பரம்பரைப் பிள்ளையும், படிக்காத பரம்பரைப் பிள்ளையும் ஒன்றாகப்போட்டியிடுவது சமூக நீதியாகுமா?

 இடஒதுக்கீடு எங்கள் உரிமை! இதில் கைவைக்கவோ, வேண்டாம் என்று சொல்லவோ உங்களுக்கு ஏது உரிமை?

 உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் பங்கைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 கோயிலில் மணியாட்ட மட்டும் ஜாதி வேண்டும். அங்கு பார்ப்பானுக்கே இடஒதுக்கீடு. ஆனால்,

 கல்விவேலைவாய்ப்பில் ஜாதி பார்த்தால் அது கேவலமாம். இது என்னங்கடா உங்க யோக்கியதை? இது பச்சை அயோக்கியத் தனமில்லையா?

 தினமலர் வழியில் கருத்துக் கூறும்போதே தெரிகிறதே பூணூல் புத்தியும் அயோக்கியத்தனமும்.

 பெரியார் ஊட்டிய விழிப்பில், இருக்கிறோம். உங்கள் சூழ்ச்சியெல்லாம் இனிபலிக்காது அம்பிகளே!

 தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கவுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வு பெற்று எழும்போது உங்கள் சூழ்ச்சியெல்லாம் ஒடுங்கி ஒழிந்து போகும்!

 இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான திறவுகோல் அது இழிவும் அல்ல; அது ஜாதி வளர்ப்பதும் அல்ல. அது உரிமை! அதைப் பெறாமல் போனால் தான் இழிவு, கேவலம்.

தன் உரிமையை இழப்பவர் இழிவுக்கு உரியவர் தானே?

 எனவே உரிமைக்கு போராடி, உயர்வதுதான் மானமுள்ள மனிதர்க்கு அழகு. அதைத் தன்மானமுள்ளவர்கள் ஒருங்கிணைந்து செய்து முடிப்பர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment