அரசியல்

Friday, September 4, 2015

2016 தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் ஏன்?


 1. இருக்கும் 10 மாத கால இடைவெளியில் மூன்றாவதாக வலுவான அணி அமைத்து மக்கள் மனத்தை மாற்றி வெற்றி பெற இயலாது. எனவே, இருப்பவற்றுள் தி.மு.க. ஆட்சிக்கு வருவதே தமிழகத்திற்கு நல்லது. தி.மு.க. விற்கு இறுதியாக ஒரு வாய்ப்பளித்ததாகவும் இது ஆகும்.

2. ஊழல் என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொது. தேர்தலில் கோடிக் கணக்கான ரூபாய் செலவிடும் நிலையுள்ளவரை ஊழல் தொடரும். எனவே, ஊழலை வைத்து ஒரு கட்சியை ஒதுக்குவது சரியல்ல.

3. ஜெயலலிதா மீது பல ஊழல் வழக்கு இருக்கும் நிலையில் காத்துக்கிடந்து கூட்டணி அமைத்த கம்யூனிஸ்டுகள் தி.மு.க. வுடன் கூட்டுச் சேரமட்டும் ஊழல் தடையாய் உள்ளது என்பது நேர்மையல்ல. அவர்கள் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியைச் சீர்செய்ய வேண்டும்.

 4. 5 வருடம் ஆட்சியிலிருந்த கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் சீர்கேடுகள் மோசமாகும். அசம்பாவம் அதிகமாகும். எனவே, மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் தற்போது தி.மு.க. ஆட்சிக்குவருவதே! வேறுமுயற்சிகள் வாக்கைச் சிதறடித்து அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவே உதவும்.

 5. புதிய தலைவரை உருவாக்க அன்புமணி, சீமான் பொன்றோர் சந்திக்க, 2021 தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராவதே சரி. இந்தத் தேர்தல் இவர்களுக்கு உரியது அல்ல.

 6. தமிழ்மொழி, இனம், ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு நலத்திட்டங்கள் இவற்றுள் ஓரளவிற்கு உறுதியாய் உள்ள கட்சி தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக சில முறை ஆட்சியை இழந்த கட்சி.

7. மதுக்கடைகளை கட்டாயம் தி.மு.க. மூடும் எனவே, இறுதிவாய்ப்பாக, இடைக்கால ஏற்பாடாக, மாற்று வலுவாக இல்லாதநிலையில் தி.மு.க. விற்கு வாய்ப்பளிப்பதே தமிழர்க்கு, தமிழ்நாட்டுக்கும் நல்லது. மூடியே ஆகவேண்டும்.

 - மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment