அரசியல்

Showing posts with label தமிழ்ச்சொல். Show all posts
Showing posts with label தமிழ்ச்சொல். Show all posts

Thursday, July 23, 2015

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!! ஆதாரம் இதோ

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ...........




 W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :

 Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

 இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

 ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.



 ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்.
மேலும் ஆதாரங்களுடன் பல செய்திகளை ஒவ்வொரு நாளும் உங்களுக்குச் சொல்வேன்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Mud - என்பது தமிழ்ச்சொல்.......



மண் என்பதன் திரிபு இது. மண்பாண்டம் என்பதை மட்பாண்டம் என்போம். அதுவே ஆங்கிலத்தில் Mud என்று சொல்லப்படுகிறது.
Path - என்பது தமிழ்ச் சொல்!....

 பாதை என்பதே ஆங்கிலத்தில் path என்றானது.

Prize என்பது தமிழ்ச்சொல்......

பரிசு என்பதே ஆங்கிலத்தில் Prize என்றானது.

நாளை மேலும் சில சொற்கள்............

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Market என்பது தூய தமிழ்ச்சொல்..........


உலகிலுள்ள பலமொழிகளும் தமிழிலிருந்து வந்தவை என்ற உண்மையை உறுதிசெய்ய Market என்ற சொல் சரியான ஆதாரம். இதை கேட்கும்போது உங்களுக்கு நம்பமுடியாது. வியப்பு ஏற்படும். என்றாலும் அதுதான் உண்மை.

 “மாறுகடை” என்ற தூயதமிழ்ச் சொல்லே Market என்ற ஆங்கிலத்தில் ஆனது.

மாறுதல் என்றால் விற்றல் வாங்குதல் என்று பொருள். ”கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு “மாறு” கொள்ளுவோம்” என்ற பாரதி பாடலில் மாறு என்ற சொல் விற்றல் வாங்கலைக் குறிக்கும்.

 மாறுதல் (விற்றல் வாங்கல்) செய்யும் கடை என்பதால் “மாறுகடை” எனப்பட்டது. பேட்டை என்பது pet என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும்.
அதே போல் கடை என்பது Ket என்றாகி மாறுகடை என்பது Market என்று ஆங்கிலத்தில் ஆனது.

 நாளை வேறு ஒரு சொல் பற்றி அறியலாம்.

படிக்கின்றவர்கள் எல்லோருக்கும் அனுப்பி தமிழின்பெருமை பரப்புங்கள். அது உங்கள் கடமை.

 - மஞ்சை வசந்தன்