அரசியல்

Monday, April 16, 2018

பா.ஜ.க. ஊழலற்ற கட்சியா? பா.ஜ.க. கலாச்சாரம் காக்கும் கட்சியா?

பா.ஜ.க. ஊழலற்ற கட்சியா?
பா.ஜ.க. கலாச்சாரம் காக்கும் கட்சியா?
அவர்களின் அயோக்கியத்தனங்கள் இதோ...
=======================
உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ். சாமியார் முதல்வரான பின் அங்கு நடக்கும் அநியாயங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் அளவே இல்லை!
============================
பா.ஜ.க. எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கும் அவரது சகோதரரும் 17 வயது இளம்பெண்ணை வல்லுறவு செய்துள்ளனர்.
அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, ஆத்திரமடைந்த அந்த எம்.எல்ஏ. அப்பெண்ணின் தந்தையைத் தாக்கியுள்ளார். தாக்கிய அயோக்கிய எம்.எல்.ஏ.வை விட்டுவிட்டு, பெண்ணின் தந்தையை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதைவிட அராஜக ஆட்சி உலகில் இருக்க முடியுமா? இப்படி அயோக்கியத்தனமாயும், அடாவடித் தனமாகவும், அநியாயமாகவும் ஆட்சி நடத்தும் பி.ஜே.பி. கட்சியினர் நேர்மையான ஆட்சி பற்றி பேசுவது அதைவிட அயோக்கியத்தனமல்லவா?
பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த பல பண முதலாளிகள் தொடர்ந்து ஊழலில் சிக்கி உண்மை வெளிவருவது ஒவ்வொரு நாளும் நடக்கிறதே! இவர்கள்தான் உத்தமர்களா?
பண முதலாளிகளுக்கு வங்கிப் பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு ஏழைகளை வஞ்சிக்கும் பி.ஜே.பி ஆட்சிதான் நேர்மையான ஆட்சியா? அப்படியிருக்க இவர்கள் நீதி, நேர்மை பற்றி பேசுவதற்கு என்ன யோக்யதையுள்ளது?
இவர்களுக்கெல்லாம் சூடுசொரணையே இருக்காதா? எந்த முகத்தில் நேர்மைபற்றிப் பேசகிறார்கள்! மோடி 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் பேசியபோது என்ன பேசினார் தெரியுமா?
இந்தியாவில் ஏழ்மையைப் போக்குவதே எனது கடமை. ஏழ்மையின் வலியை உணர்ந்தவன் நான்.
ஏனென்றால், ஏழைத்தாயின் மகன் நான். என்னை எதிர்த்து நிற்வர் இளவரசர். அவர் ஏழைகளைப் பார்ப்பதாக இருந்தால் கேமராவுடன்தான் போவார். ஆனால், நான் ரயிலில் பெட்டி பெட்டியாக ஏறி டீ விற்றவன். ஏழ்மையை அனுபவித்தன்.
எனக்க 300 நாடாளுமன்ற உறுப்பினர்களத் தாருங்கள். இந்தியாவின் ஏழ்மையைப் போக்குகிறேன்.
ஆனால், அவர் ஏழைகளை வஞ்சித்து கார்ப்பரேட்டுகளின் கையாளாய் ஆட்சி நடத்துகிறார்! இவர்களை இனியும் ஆள விடலாமா?

No comments:

Post a Comment