அரசியல்

Thursday, July 23, 2015

Market என்பது தூய தமிழ்ச்சொல்..........


உலகிலுள்ள பலமொழிகளும் தமிழிலிருந்து வந்தவை என்ற உண்மையை உறுதிசெய்ய Market என்ற சொல் சரியான ஆதாரம். இதை கேட்கும்போது உங்களுக்கு நம்பமுடியாது. வியப்பு ஏற்படும். என்றாலும் அதுதான் உண்மை.

 “மாறுகடை” என்ற தூயதமிழ்ச் சொல்லே Market என்ற ஆங்கிலத்தில் ஆனது.

மாறுதல் என்றால் விற்றல் வாங்குதல் என்று பொருள். ”கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு “மாறு” கொள்ளுவோம்” என்ற பாரதி பாடலில் மாறு என்ற சொல் விற்றல் வாங்கலைக் குறிக்கும்.

 மாறுதல் (விற்றல் வாங்கல்) செய்யும் கடை என்பதால் “மாறுகடை” எனப்பட்டது. பேட்டை என்பது pet என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும்.
அதே போல் கடை என்பது Ket என்றாகி மாறுகடை என்பது Market என்று ஆங்கிலத்தில் ஆனது.

 நாளை வேறு ஒரு சொல் பற்றி அறியலாம்.

படிக்கின்றவர்கள் எல்லோருக்கும் அனுப்பி தமிழின்பெருமை பரப்புங்கள். அது உங்கள் கடமை.

 - மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment