அரசியல்

Wednesday, February 21, 2018

இதுதான் சீமான் தமிழ்த்தேசியமா?

Image may contain: 1 person, text
”கலைஞர் தமிழர் இல்லை, மண்ணின் மைந்தர் இல்லை!
ஆனால்,
கமலகாசன் மண்ணின் மைந்தர்; தமிழர்!"
இதுதான் சீமான் பேசும் தமிழ்த் தேசியம்!
காவடித் தூக்கி தமிழ் மரபை மீட்கப் போகிறேன் என்கிறார்!
பார்ப்பனர்களைத் தமிழர் என்கிறார்.
வை.கோ. தமிழன் இல்லை என்கிறார்.
ஆனால், சேரன், சோழன், பாண்டியன் என் முப்பாட்டன் என்கிறார்.
அந்த சேரன்தானே இன்றைய மலையாளி.
அன்றைக்குத் தமிழ் பேசியவர்கள்தானே இன்றைக்கு மலையாளம் பேசுகின்றனர்.
மொழி மாறியதால் இனம் மாறுமா?
ஆரிய பார்ப்பான் தமிழ் பேசுவதால் தமிழன் ஆக முடியுமா?
நாம் தமிழர் கட்சி வியன் அரசு கமலை ஏற்க முடியாது என்கிறார். ஆனால், சீமான் ஏற்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொள்கைதான் என்ன? அங்கே பல பிரிவுகளா? சீமானுக்கம் வியன் அரசுவிற்கும் கருத்து மோதலா?
அரசியல் நடத்துவதற்காக திராவிடத்தை எதிர்ப்பது ஆரியத்திற்கு அடிமை சேவகம் செய்வதற்குச் சமம்.
காவிரிப் பிரச்சினையைக் காட்டி கர்நாடக எதிர்ப்பு செய்தார். அது பங்காளி சண்டை என்று நாம் சொன்னதை ஏற்கவில்லை. பார்ப்பன எதிர்ப்பு இனமோதல், பண்பாட்டு மோதல், கலாச்சார மோதல் என்றோம். ஆனால், அதை சீமான் ஏற்கவில்லை. இப்போது உச்சநிதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டது. இனி சீமான் என்ன செய்யப் போகிறார். கர்நாடக அணையை உடைக்கப் போகிறாரா?
உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்குள் வரப்புச் சண்டை வருகிறது. அதற்காக அண்ணன் தம்பி உறவு அற்று விடுமா?
தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியினர் நன்கு சிந்திக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியினர் நமக்கு எதிரிகள் அல்ல.
அவர்கள் தங்களைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றைச் சொல்கிறோம்!

No comments:

Post a Comment