அரசியல்

Thursday, February 1, 2018

பி.ஜே.பி. கட்சிக்குள் திரைவிலகி வெளிப்படும் திராவிட ஆரியப் போராட்டம்

திராவிடம் ஏது? ஆரியம் ஏது? என்று எதுவும் இல்லாதது போல் எவ்வளவு மறைத்துப் பேசினாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்த வெறுப்பு நெருப்பு வெளிப்பட்டேத் தீரும். தற்போது அதற்காக புகைப்படலம் புறப்பட்டுவிட்டது.
தமிழகம் திராவிட உணர்வும் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் தெளிவும் பெற்ற மண்.
பக்தர்களாய் இருந்தாலும் மொழி உணர்வும் இனவுணர்வும் தமிழ் மக்களக்கு ஏராளம். அது தந்தை பெரியார் ஊட்டிய உணர்வின் விளைவு.
பக்தர்களில் பெரும்பாலோர் பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள். கடவுள் கொள்கை நீங்கலாய் மற்ற பெரியாரின் கொள்கைகளால் அவர்கள் கவரப்பட்டவர்கள். எனவே, கடவுளை நம்பக்கூடிய பலரும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கக் கூடியவர்கள்’
தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க பிஜேபியில் ஆரியர்-ஆரியர் அல்லாதார் உணர்வு வெளிப்பட்டு வருகிறது. அது இன்னும் முழுமையாகத் துணிவாக வெளிப்பட வேண்டும்.
இந்துக்களில் 97% ஆரியர் அல்லாதார், 3% உள்ள ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஏன் அடங்கி 97% மக்கள் நடக்க வேண்டும்?
சமஸ்கிருதத்தை ஏன் ஏற்க வேண்டும்? ஆரிய ஆதிக்கத்திற்காக அவர்களால் எழுதப்பட்ட சாஸ்திரங்களை ஏன் ஏற்க வேண்டும்?
தங்கள் நலத்துக்காக இந்து மதத்தை ஆரிய பார்ப்பனர்கள் ஒரு கருவியாகத்தானே பயன்படுத்துகிறார்கள். அதற்கு 97% மக்கள் ஏன் துணை போக வேண்டும்?
இந்த உணர்வு பிஜேபியில் உள்ள ஆரிய பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அதிகரித்து வருகிறது. இது மேலும் வளர வேண்டும். ஆரிய ஆதிக்கம் ஒழிய, மதவெறி அகல அதுவே சரியான வழி!
பி.ஜே.பி.யில் உள்ள ஆரியர் அல்லாதாரும், பி.ஜே.பி.யை ஆதரிக்கின்ற ஆரியர் அல்லாதவர்களும் இந்த உணர்வையும் தெளிவையும் பெற்று தங்கள் மொழி, தங்கள் பண்பாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
இல்லையென்றால் இந்து மதத்தைக் காட்டி ஆரிய ஆதிக்கத்தையும், சமஸ்கிருதத் திணிப்பையும் கொண்டு வந்து, ஆரியர் அல்லாதாரை அடிமைப்படுத்தி விடுவர்! எச்சரிக்கை!

No comments:

Post a Comment