அரசியல்

Tuesday, September 12, 2017

‘நீட்’ தேர்வை தி.மு.க. ஆதரித்தது என்பது சரியா? மோசடிப் பிரச்சாரமா?

மன்மோகன் சிங் அவர்கள் காலத்தில்நீட்தேர்வு கொண்டுவர முடிவு செய்யப்பட்டபோது, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒருவழியாக அதைக் கொண்டுவர முடிவு செய்தனர். மாறாக, மாநிலக் கல்வித் திட்ட மாணவர்களின் உரிமையைப் பறித்தது, அவர்களின் உயர்கல்வி வாய்ப்பைத் தடுக்கும் நோக்கில் தற்போது பிஜேபி அரசு கொண்டுவந்துள்ளநீட்தேர்வு முறையல்ல அது. இதை எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக, மன்மோகன்சிங் கொண்டுவந்தநீட்தேர்வு, விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு உண்டு என்று உறுதியளித்தது. இப்படி மாநில உரிமைக்கும், மாநில மாணவர்களுக்கும் பாதிப்பில்லாதநீட்தேர்வைத்தான் தி.மு.. அப்போது ஆதரித்தது.

இப்போது விரும்பும் மாநிலங்கள் மட்டும்நீட்தேர்வை நடத்திக் கொள்வதை நாம் தடுக்கவில்லையே, தமிழகம் போன்ற விரும்பாத மாநிலங்களின் மீது திணிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

மாநிலத்திற்கு உரிய மருத்துவக் கல்லூரி இடங்களில் சேர்ப்பதற்குத்தான்நீட்தேர்வு கூடாது என்று எதிர்க்கிறோம். மத்தியத் தொகுப்பில் உள்ள இடங்களைநீட்தேர்வு மூலம் நிரப்புவதை எதிர்க்கவில்லை.

டாக்டர் இரவீந்தரநாத் பல மாதங்களாக இதைத் தெளிவாக விளக்கி வருகிறார். அப்படியிருக்க உண்மைக்கு மாறாக அயோக்கியத்தனமாக தி.மு.. மீது பழிபோடுவது மோசடிச்  செயலாகும்.

தங்கள் மோசடியை, சதியை, கொள்ளையை மறைக்க, உண்மைக்கு மாறான பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மக்கள் வெறுப்பின் உச்சத்திலும், வேதனையின் விளிம்பிலும் உள்ளனர். எனவே, இவர்களின் இப்பித்தலாட்டப் பிரச்சாரங்கள் மக்களை மேலும் எரிச்சல் அடையவே செய்யும். எனவே, குருமூர்த்திகள் இப்படியே எழுதட்டும், பேசட்டும். அப்போதுதான் விரைவில் தீர்வு வரும்!

No comments:

Post a Comment