அரசியல்

Tuesday, September 12, 2017

அயோக்கியத்தனத்தின் அசல் வடிவம் துக்ளக்! அனிதா பெற்ற மதிப்பெண் அரசு அள்ளிக் கொடுத்ததாம்!


துக்ளக் குருமூர்த்தி கொஞ்சங்கூட கூச்சநாச்சம், சூடுசொரணை இன்றி, நியாய உணர்ச்சியோ, நடுநிலையோ இன்றி அயோக்கியத்தனமான இக்கருத்தை துக்ளக் ஏட்டில் வெளியிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவார ஆட்களும், பிஜேபி பேர்வழிகளும் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள், அவதூறு, பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள் என்பதை இதன்மூலம் எவரும் எளிதில் அறியலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை +2 பொதுத்தேர்வு மிகக் கடுமையான கண்காணிப்போடு எவ்வித முறைகேடும் இன்றி நடப்பதை எவரும் அறியலாம். தேர்வின்போது, பள்ளியின் தலைமையாசிரியரையே மாற்றி, வேறு பள்ளி தலைமையாசியரைக் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது.

விடைத்தாள் ஜெராக்ஸ் காப்பி பெற்று ஒருவரின் விடைத்தாள் சரியாகத் திருத்தப்பட்டுள்ளதா? மதிப்பெண் சரியாகப் போடப்பட்டுள்ளதா? என்பதை யாரும் தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட நீதிமன்றம் சென்று வழக்கு நடத்தி அந்த மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார்கள்.

+2 தேர்வில் ஒரு மதிப்பெண்ணைக்கூட காரணமின்றி போடவும் முடியாது, குறைக்கவும் முடியாது. அப்படியிருக்க, தமிழக அரசு +2 தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண்ணை அள்ளி வழங்குகிறது என்று கொஞ்சங்கூட குற்ற உணர்ச்சியின்றி, மனசாட்சியின்றி அப்பட்டமான ஒரு பொய்யை அயோக்கியத்தனமாய்க் கூறுகிறார் குருமூர்த்தி யென்றால், அவருக்கு தமிழக மாணவர் சமுதாயம் சரியான பாடம் கற்பிக்கும். துக்ளக்கை ஊர்தோறும் கொளுத்துவார்கள், துக்ளக்கை சூடுசொரணையுள்ள தமிழன் இனித் தீண்டமாட்டான்.

No comments:

Post a Comment