அரசியல்

Sunday, November 15, 2015

பீகாரைப் பின்பற்றுங்கள்!


மக்கள் நலக்கூட்டணிக்கும் தே.மு.தி.க.விற்கும் எமது கனிவான வேண்டுகோள்! தனிப்பட்ட வெறுப்புகளைத் தள்ளுங்கள்!
தமிழகத்தின் நலனைக் கொள்ளுங்கள்!
- மஞ்சை.வசந்தன்
ஊழல் கேடானது! மதவெறி ஆபத்தானது! ஊழலை வெறுத்து மதவெறிக்குத் துணை நிற்கலாமா? முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மஅதவெறி பின்னர் களையப்பட வேண்டியது ஊழல்!
ஊழலற்ற நிதிஷ்குமார் ஊழல் காரணத்திற்காக லாலுவை ஒதுக்கியிருந்தால் மதவெறிக் கும்பலை வீழ்த்தியிருக்க முடியுமா?
தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் இதைச் சிந்திக்க வேண்டும்.
ஊழல் காரணத்திற்காக தி.மு.க.வை ஒதுக்கும் கம்யூனிஸ்டுகள் ஊழல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றது ஏன்?
இரட்டை அளவுகள் இடதுசாரிகளுக்குச் சரியா? நியாயமா?
பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று பி.ஜே.பி. அறிவித்துவிட்டது. இதை அ.தி.மு.க. மறுக்கவில்லை.
ஆக, தமிழகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது அ.தி.மு.க.வும் பி.ஜே.பி.யும்.
தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஊழலற்ற கூட்டணி என்று அமைந்தால் வாக்குகள் சிதறி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவே வழிசெய்யும்.
2016 தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்த வேறு அணி வர வாய்ப்பே இல்லை. எனவே, இத்தேர்தலில் தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற அணி அமைத்து போட்டியிடுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
அதன்பின் 2021அய் இலக்கு வைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
தத்துவார்த்தம் யதார்த்தத்தை ஒட்டியதாக இல்லையெனில் தோல்வியே மிஞ்சும். கற்பனையில் களம் காணக் கூடாது! சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
தமிழ்நாடு டில்லி அல்ல. கெஜ்ரிவால் சாதனை இங்கு சாத்தியப்படாது. டில்லி படித்த பலதரப்பு மக்கள் வாழும் பகுதி. அங்கு உடனடிக் காரணங்கள் உடனடி விளைவுகளை உருவாக்கும். ஆனால், தமிழகம் நிலையான வாக்கு வங்கிகளை உடைய ஒரு மாநிலம். இங்கு ஒட்டுமொத்த மாறுதல் உடனே நிகழாது.
கொள்கைவாதிகளை, நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போர் குறைவு.
எழுத்தாளர் ஞானி, கம்யூனிஸ்ட் மகேந்திரன் தேர்தலில் நின்றார்களே, அவர்களைவிட தகுதியான ஆட்கள் உண்டா? அவர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன.
சகாயம் முன்னிறுத்தப்பட்டாலும் அதுதான் நடக்கும். நடுநிலை வாக்குகள் கிடைக்கும். ஆனால், வெற்றிக்கு உதவாது, விரயம்தான் ஏற்படும்.
எனவே, வாக்கு வங்கியை கணக்கிட்டு அணி சேர்ந்து வீழ்த்த வேண்டிய அ.தி.மு.க., பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும். தி.மு.க. குறையுள்ள கட்சி. ஆனால், ஆபத்தான கட்சியல்ல! ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்!
திருந்தி வருந்தும் திமுகவிற்கு மீண்டும் வாய்ப்பளித்தால் நேர்மையான நல்லாட்சி கிடைக்க நிறைய வாய்ப்புண்டு!

___

No comments:

Post a Comment