அரசியல்

Sunday, November 15, 2015

கீதையும் எனது கேள்வியும்.......(5)


 கொலை செய்ய அஞ்சாதீர்!

 கூறுகிறது பகவத் கீதை!

 “ஆன்மா அழிவில்லாதது. எனவே, யாரைக் கொலை செய்வது பற்றியும் அஞ்சவேண்டாம்!”
(பகவத்கீதை அத்தியாயம் 2, சுலோகம் 30)

 இப்படி கொலைவெறியைத் தூண்டும் பகவத்கீதை ஒருபுனித நூலா?
இதைப்படித்துவிட்டுத்தான் கோட்சே காந்தியைக் கொன்றான்.

 கொலை வெறியைத் தூண்டும் பகவத்கீதையைத் தடைசெய்ய வேண்டாமா?
மாறாக இதை மாணவர்களுக்குப் பாடமாகச் சொல்லித்தர வேண்டும் என்பது சரியா? சிந்திப்பீர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! சிந்தியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

1 comment:

  1. /// “ஆன்மா அழிவில்லாதது. எனவே, யாரைக் கொலை செய்வது பற்றியும் அஞ்சவேண்டாம்!”
    (பகவத்கீதை அத்தியாயம் 2, சுலோகம் 30)
    ////////////////////////////////////////////////

    இது அர்ஜுனனுக்கு எந்த காலகட்டத்தில் கூறப்பட்டது என பாருங்கள் !

    சும்மா, சாதாரண குடும்பத்தில் இருக்கும்போதே கூறப்பட்டதல்ல, போரின்போது எதிரிகளை அளிப்பதற்காக கவலைகொண்டவனிடம் இவர் கூறிய தத்துவ வார்த்தைகள் !

    இந்த தத்துவ வார்த்தைகளை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் எவனையும் கொலை செய்யமாட்டான்' என அதே அத்தியாயத்தில் சொல்கிறாரே ?

    அதை படிக்கவில்லையா ?

    எனவே,அர்ஜுனன் எதிரிகளை அளிப்பதற்காக தயங்கிய சமயத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் தான் இது. அதற்காக எல்லோருமே இப்படி சட்டத்தை கையில் எடுக்கச்சொல்லவில்லை !

    அரசருக்கு/அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

    நீங்கள் கூறுவது இப்படி உள்ளது. ஒரு போலீஸ் ஒருவனை அடிக்கிறான், அதுபோல் நானும் அடிக்கலாமா ? என கேட்பது போல் உள்ளது !

    ReplyDelete