அரசியல்

Sunday, November 15, 2015

கீதையும் எனது கேள்வியும்.......(4)



 கொலை செய்யப்படுகிறவன் மகிழ்ச்சியடைய வேண்டுமாம்!
பகவத்கீதை சொல்கிறது!

 எப்படி ஒருவன் நைந்து போன துணியைத் தள்ளிவிட்டு புதுத்துணியை மகிழ்வுடன் எடுத்துக் கொள்வானோ, அப்படி பழைய உடல் போல் புதிய உடல் கிடைப்பதை எண்ணி மகிழவேண்டும். புதிய உடல் கிடைக்க இந்த உடல் கொலை செய்யப்படுவது தானே காரணம். எனவே, கொலை செய்யப்படும் போது மகிழ்ச்சியடைய வேண்டும்.
(பகவத்கீதை – அத்தியாயம் 2, சுலோகம் 22)

 ஒரு தகப்பனை நம்பி குடும்பம் உள்ளது. அத்தகப்பனை ஒருவன் கொலை செய்தால் அக்குடும்பமே ஆதரவற்று வருவாய் அற்றுப்போகும்.
உண்மைநிலை இது. ஆனால், கொலை செய்யப்பட்டால் மகிழ வேண்டும் என்கிறது கீதை! இதுதான் ஒரு புனித நூலா? பயனுள்ள நூலா?

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

 படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

1 comment:

  1. ////எப்படி ஒருவன் நைந்து போன துணியைத் தள்ளிவிட்டு புதுத்துணியை மகிழ்வுடன் எடுத்துக் கொள்வானோ, அப்படி பழைய உடல் போல் புதிய உடல் கிடைப்பதை எண்ணி மகிழவேண்டும்.
    ////////////////////////////////////////////////

    இது அர்ஜுனனுக்கு எந்த காலகட்டத்தில் கூறப்பட்டது என பாருங்கள் !

    சும்மா, சாதாரண குடும்பத்தில் இருக்கும்போதே கூறப்பட்டதல்ல, போரின்போது எதிரிகளை அளிப்பதற்காக கவலைகொண்டவனிடம் இவர் கூறிய தத்துவ வார்த்தைகள் !

    இந்த தத்துவ வார்த்தைகளை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் எவனையும் கொலை செய்யமாட்டான்' என அதே அத்தியாயத்தில் சொல்கிறாரே ?

    அதை படிக்கவில்லையா ?

    எனவே,அர்ஜுனன் எதிரிகளை அளிப்பதற்காக தயங்கிய சமயத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் தான் இது. அதற்காக எல்லோருமே இப்படி சட்டத்தை கையில் எடுக்கச்சொல்லவில்லை !

    அரசருக்கு/அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

    நீங்கள் கூறுவது இப்படி உள்ளது. ஒரு போலீஸ் ஒருவனை அடிக்கிறான், அதுபோல் நானும் அடிக்கலாமா ? என கேட்பது போல் உள்ளது !

    ReplyDelete