அரசியல்

Sunday, November 15, 2015

கியாஸ் சிலிண்டர் விபத்து... ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு உண்டு!


கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக நிவாரணம் பெற முடியும்.
ஒருவர் எரிவாயு இணைப்பைப் பெற்றாலே, இந்த இன்ஷுரன்ஸ் தானாகவே அவருக்கு வந்துவிடும். கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், ரூ. 50 லட்சம் வரை இதன் மூலமாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இழப்பீடு சேதத்தின் அளவைப் பொறுத்தது. அதிகப்பட்ச இழப்பீடு ரூபாய் 50 லட்சம்.
இழப்பீடு பெறுவது எப்படி?
விபத்து நடந்தால், உடனடியாக கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்யும்வரை விபத்துக்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.அய்.ஆர் பதிவு செய்ய வேண்டும். உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை பெற வேண்டும். காயங்களுக்குச் சிகிச்சை எடுத்திருந்தால், மருத்துவ மற்றும் மருந்து ரசீதுகளைப் பத்திரப்படுத்த வேண்டும். உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும்.
இழப்பீடு பெற நாம் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் அய்.எஸ்.அய் தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்திருக்கக் கூடாது. உங்கள் பெயரில் வாங்கிய கியாஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்திருக்க வேண்டும். இவை சரியாக இருப்பின் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment