அரசியல்

Sunday, March 25, 2018

கடவுள் இல்லை என்று கீழ்க்கண்டவற்றை படித்தால் நீங்களே சொல்வீர்கள்!


- மஞ்சை. வசந்தன்
-===============================
1. உலகத்தை கடவுள் படைத்திருந்தால் உலகில் ஒரிடத்தில் 20 அடியில் தண்ணீர்; இன்னோர் இடத்தில் 60 அடியில் தண்ணீர்; இன்னோர் இடத்தில் 60 அடியில் தண்ணீர்; இன்னோர் இடத்தில் 100 அடியில் தண்ணீர்; சில இடங்களில் 1000 அடியில் தண்ணீர்; இன்னும் சில இடங்களில் எவ்வளவு ஆழம் தோண்டினாலும் தண்ணீரே இல்லை! இப்படி கடவுள் படைக்குமா?
2. வளைகுடா நாடுகளில் மட்டம் எண்ணெய். மற்ற நாடுகளில் இல்லை. கடவுள் படைத்தால் இப்படிப் படைக்குமா?
3. பகலில் எல்லா நாள்களிலும் சூரியன். ஆனால், இரவில் எல்லா நாள்களிலும் வெளிச்சம் தர நிலவு இல்லை. கடவுள் வெளிச்சத்திற்காக இவற்றைப் படைத்திருந்தால் இப்படிப் படைத்திருக்குமா?
4. ஒரு பிள்ளை அழகாக, இன்னொரு பிள்ளை அழகில்லாமல், ஒரு பிள்ளை நொண்டி, இன்னொரு பிள்ளை குருடு. இப்படி பிறக்கும்போதே வேறுபாடாய் கடவுள் படைக்குமா?
5. போன பிறவியில் செய்த வினை என்பது சமாளிப்பு! அந்த போன பிறவியைப் படைத்ததும் கடவுள்தானே. அதில் அவன் சரியாக வாழும்படி படைக்க வேண்டியதுதானே? அனைத்தும் கடவுள் செயல் என்றால் தப்பு செய்வதும் கடவுள் செயல்தானே!
6. அக்காலத்தில் பல நோய்க்கு மருந்து இல்லை; வாகன வசதி, தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லை; இன்று எல்லாம் உள்ளது. எல்லாம் கடவுள் செயல் என்றால் அக்காலத்திலே ஏன் இவற்றை கடவுள் கொடுக்கவில்லை?
7. நிலத்தில் ஒரு இடம் வளப்பம், இன்னொரு இடம் களர், இன்னொரு இடம் வளப்பம் இன்றி இருக்கிறது. கடவுள் படைப்பாயின் இப்படி இருக்குமா?
8. ஒரே அடியில் மழை பெய்து வெள்ளம் அல்லது ஒரேயடியாய் காய்ந்து வறட்சி! திடீரென புயற்காற்று, பூகம்பம், சுனாமி. பல லட்சம் உயிரும், பொருளும் இழப்பு. எல்லாம் கடவுள் செயல் என்றால் இப்படி நடக்குமா?
9. பசு பால் தருகிறது. கொசு ஏன்? கடவுள் படைப்பாயின் கொசுவைப் படைத்து கொடிய நோய்கள் வரக் கடவுள் வழி செய்யுமா?
10. கொடியவர்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் நோயாலும், வறுமையாலும் வாடுகிறார்கள். இவ்வுலகை கடவுள் இயக்கினால், கண்காணித்தால், பாவ புண்ணியத்துக்கு பலன் தந்தால் இப்படி நடக்காது. எனவே, கடவுள் இல்லை என்பதுதானே உண்மை!
11. இனப்படுகொலை, மதமோதல், கற்பழிப்பு, கொள்ளை ஏராளமாய் நடக்கிறது. இதற்கு எதிராய் கடவுளின் செயல்பாடு ஏதும் இல்லையே! வலியவர் வாழ்கிறார்கள் என்றால் கடவுள் இல்லை என்றுதானே அர்த்தம்.
மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

No comments:

Post a Comment