அரசியல்

Thursday, March 24, 2016

சித்த மருத்துவ சேர்மானம் போன்றவர் விஜயகாந்த் முதன்மை மருந்தாக்கியதால் மொத்தமும் பாழ்!

சித்த மருத்துவ சேர்மானம் போன்றவர் விஜயகாந்த்
முதன்மை மருந்தாக்கியதால் மொத்தமும் பாழ்!
தி.மு.க.விற்கு இழப்பில்லை இரட்டிப்பு ஆதாயம்.

- மஞ்சை வசந்தன்

மூன்று மாதங்களுக்கு மேலாக முட்டி மோதி, இறுதியில் குட்டிச்சவரில் குடிபுகுந்துள்ளார் விஜயகாந்த்.

நால்வர் கூட்டணியுடன் சேர்வதற்கு முதல் நாள்கூட தங்கள் விமானம் புறப்பட்டுவிட்டது. இனி யாருக்காகவும் காத்திருக்காது என்று நால்வர் அணி கூறியது. ஆனால், மறுநாள் தரையிறங்கியது; தரமும் இறங்கியது அந்த அணி.
விஜயகாந்த் ஒரு எம்.எல்-.ஏ.வாக இருக்கக்கூட அறவே தகுதியற்றவராய் தன்னிலைத் தடுமாறி, நாலு வார்த்தைகூட பேசமுடியாத குழப்பத்தின் மொத்த வடிவமாய், குளறுபடியின் செயல்வடிவமாய் உள்ளவர். அவரது மனைவி அவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கென்று எக்கொள்கையும் இல்லை. எந்த ஆற்றலம் இல்லை. ஏதோ திரைப்படத்தில் வந்த செல்வாக்கால் புதிதாகக் கட்சி தொடங்கியதும், மாற்றம் விரும்பியவர்களும், எம்.ஜி.ஆர் பற்றாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் திரண்டனர். கட்சித் தொடங்கிய போதிருந்த செல்வாக்கில் மூன்றில் ஒரு பகுதிகூட தற்போது இல்லை.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டால்தான் அத்தனை எம்.எல்.ஏ.க்கள் வென்றனர். நடுநிலையோடு சிந்திக்கின்ற எவரும் இவற்றை மறுக்க மாட்டார்கள்.

தி.மு.க. விஜயகாந்தைப் பயன்படுத்த நினைத்தது வேறு; நால்வர் கூட்டணி அவரைச் சேர்த்துள்ள நிலை வேறு.

விஜயகாந்திற்கு எத்தகுதியும் இல்லையென்றாலும் அவரிடம் உள்ள தொகுப்பான வாக்குகள் கிடைத்தால் அது செயலலிதாவை வீழ்த்தும் முயற்சியை எளிமைப்படுத்தும் என்பதே தி.மு.கவின் எதிர்பார்ப்பு.

தனிப்பட்ட விஜயகாந்தின் பலவீனம், தகுதியின்மை அங்கு கணக்கில் வராது. காரணம், ஆட்சியில் பங்கில்லையென்று தி.மு.க. சொல்லிவிட்டது.

ஆனால், நால்வர் கூட்டணி விஜயகாந்தை சேர்த்ததோடு அல்லாமல் அவர்தான் முதல்வர் என்று அறிவித்து பாதிக்கு மேற்பட்ட இடங்களையும் பகிர்ந்து கொடுத்துவிட்டது. கூட்டணியே விஜயகாந்த் கூட்டணி என்று மாற்றிவிட்டனர்.
ஆக, நால்வர் கூட்டணியில் உள்ள பொதுவுடமைக் கட்சிகளின் தனித்தன்மை, தனிச் சிறப்பு, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் தனித்தன்மை, தனிச்சிறப்பு, வைகோவிற்குள்ள தனித்தன்மை எல்லாம் இங்கு புறந்தள்ளப்பட்டு விஜயகாந்த் முதன்மையும், முன்னிலையும் படுத்தப்பட்டதனால், விஜயகாந்தின் தகுதிதான் மக்களால் பார்க்கப்படும். விஜயகாந்த்தை மக்கள் அரசியல் தலைவராகப் பார்ப்பதைவிட நகைப்பிற்குரியவராகவே பார்க்கின்றனர். அவர் மேடையில் ஏறினாலே ஏளனமாய் சிரிக்கின்றனர்.
எனவே, விஜயகாந்தை முன்னிறுத்தியதன் மூலம், நால்வர் கூட்டணிக்கு இதுவரையிருந்த ஒரு மரியாதை, நல்லெண்ணம், நம்பிக்கை எல்லாம் பாழ் ஆனது.
விஜயகாந்தை ஜெயலலிதா சரியாகப் பயன்படுத்தினார்; கலைஞர் சரியாகப் பயன்படுத்த முயன்றார். ஆனால், நால்வர் அணி முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி முதலுக்கே மோசமான ஒரு நிலையில் சீர்குலைந்து நிற்கிறது.
சித்த மருத்துவத்தில் நோய்க்கு மருந்து செய்யும்போது முதன்மை மருந்துடன் சில பொருட்களைச் சேர்மானமாகச் சேர்ப்பர். அப்படிப்பட்ட சேர்மானம்தான் விஜயகாந்த். சேர்மானத்தையே முதன்மை மருந்தென்று ஆக்கினால் மருந்தே பாழ் ஆகும்; நோயும் தீராது.
அப்படித்தான் விஜயகாந்தை முதன்மைப்படுத்தியதன் மூலம் நால்வர் அணிக்கென்று இருந்த தனித்தன்மையும், சிறப்பும், நம்பிக்கையும் முற்றிலும் பாழாகிவிட்டன.
இந்தக் கூட்டணியால் தி.மு.க. கழகத்திற்குப் பாதிப்பா?
நால்வர் கூட்டணியாக அது இருந்தால்கூட அதற்கென்று ஒரு கணிசமான வாக்கு கிடைத்திருக்கும். அது தி.மு.க.விற்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளைக் குறைத்திருக்கும். தற்போது விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததன்மூலம் அந்த அணியை மக்கள் முற்றாகப் புறக்கணிப்பர். அதனால், தி.மு.க.விற்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். அதோடு, விஜயகாந்த்திற்குக் கொடுக்க வேண்டிய கணிசமான இடங்களைத் தி.மு.க. தனக்குப் பயன்படுத்தி அதிக இடங்களை வெல்லலாம். இதன்மூலம் தி.மு.க.விற்கு இரட்டிப்புப் பலன்தான்.
வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் வைகோ வலையில் விஜயகாந்த்!
தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கே வைககோவிற்கு, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை என்ற அணியுடன் வியஜகாந்த் இணைந்ததன் மூலம், ஜெயலலிதாவை வீழ்த்தும் வியூகத்தில் விஜயகாந்த் தோற்றுவிட்டார். முதல்வர் ஆசை காட்டிய கூட்டணியில் விஜயகாந்த் சபலப்பட்டு சாய்ந்ததன் மூலம் அவரது அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. விஜயகாந்தின் முடிவு தற்கொலைக்குச் சமம்!
2016 தேர்தலின் ஒற்றை நோக்கு இதுதான்: செயலிழந்த அராஜக அ.தி.மு.க
அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டு மொத்த எண்ணம். அதற்கு ஒரே வழி திமுகவிற்கு வாக்கள்விப்பதே! அதிமுக மீண்டும் வந்தால் அராஜகம், அத்துமீறவும், அபகரிப்பும் எல்லை மீறும். அதற்கு திமுக வருவது எவ்வளவோ மேல். திருந்தி நடக்க வாய்ப்புண்டு என்பது தானே மக்கள் எண்ணமாக இருக்கும். தமிழக மக்கள் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள்!

இன்றைய தமிழக அரசியல் சூழலில் அதிமுக வை வீழ்த்த திமுக அணியைத் தவிர எந்த அணிக்கும் வலிமையில்லை. இதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

வைகோ அணிக்கோ, அன்பு மணிக்கோ, சீமானுக்கோ அளிக்கபடும் வாக்கு ஜெயல்லிதாவிற்கு சாதகமான வாக்கு என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மதவாத பாஜக வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, தமிழக மக்களுக்கு திமுக மீது சில வெறுப்புகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த திமுக அணியையே மக்கள் இத்தேர்தலில் ஆதரிப்பர். 

திமுக பழைய தவறுகளை முற்றமாக களைந்து நேர்மையான வெளிப்படையான, தமிழர் நலன் சார்ந்த ஆட்சியை செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கொடுக்கும் வாக்குறுதியை எப்பாடுபட்டாகிலும் நிறைவேற்றி களங்கத்தைப் போக்க வேண்டும்.

இத்தேர்தலில் மக்கள், குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மக்கள் கொளல் ஒன்றே தீர்வு.

ஆம். திமுக -_ கலைஞரிடம் குறைகளைவிட சாதனைகள், பணிகள், வளர்ச்சித் திட்டங்கள், சமத்துவ செயல்திட்டங்கள் ஏராளம். இவற்றை எவரும் மறுக்க முடியாது. இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்

எனவே, அவற்றை எண்ணி வாக்களிப்பதே வள்ளுவர் காட்டும் வழி!

பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து அதிமுக ஆட்சியை ஆதரிக்கும் போது, பார்ப்பனர்களல்லாதார் திமுகவை ஆதரிப்பதே தமிழர் நலனுக்கும், தமிழருக்கும், தமிழர் வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கமுடியும்!

தமிழர்கள் பார்ப்பன நரிகளுக்குப் பாடம் கற்பிக்க சரியான வாய்ப்பு இத்தேர்தல். தமிழர்கள் விழிப்போடிருந்து வாக்களிக்க வேண்டும்!

தற்போது தேர்தல் களம் தெளிவாக இருக்கிறது. பி.ஜே.பி. அறவே தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுவிட்டது. பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு இது செல்வாக்கறிய ஒரு சோதனைத் தளம் அம்மட்டே... விஜயகாந்த் அணி தகுதியற்ற தலைமையால் தகுதியற்ற அணி.

எனவே, தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிற்கும் இடையேதான் போட்டி. அ.தி.மு.க. மீதான வெறுப்பால் மக்கள் அதைப் புறக்கணிப்பர். கட்சிக்காரர்களின் ஓட்டு கிடைக்கும். மேலும், ஆண்ட கட்சி மீண்டும் ஆள்வதைவிட, தி.மு.க.விற்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்ற எண்ணமே மக்களிடம் மேலோங்கும். இது தி.மு.க. ஆட்சிக்கு வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

ஆக, இத்தேர்தலில் தி--.மு.க. தனது பழைய சாதனைகளை பட்டியலிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றால், செய்யவிருக்கும் பணிகளைத் தொகுத்துக் கூறினால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும் என்பது உறுதி!

மக்கள் நடைமுறை சாத்தியம் உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும். 


No comments:

Post a Comment