அரசியல்

Friday, August 28, 2015

இட ஒதுக்கீடு ஏன்?


இன்றைய இளைஞர்கள் உள்ளத்தில் எழும் கேள்வி.
 இடஒதுக்கீடு தேவையா? என்பதை முடிவுசெய்ய இடஒதுக்கீட்டுக்குமுன் என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீட்டிற்கு முன் எல்லா பதவிகளும், கல்வி கற்கும் உரிமையும் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாக இருந்தது.

மத்திய அரசுத்துறைகள் முழுமையும் பார்ப்பனர் மயமாகவே இருந்தது. அதை மாற்றவே இடஒதுக்கீடு வந்தது. அதன் பிறகுதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

எதற்கெல்லாம் இடஒதுக்கீடு?
கல்விபயில, வேலையில் அமர, பதவி உயர்வுபெற.

எதன் அடிப்படையில் இடஒதுக்கீடு?
யாரெல்லாம் சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியுள்ளார்களோ அவர்களுக்கு இடஒதுக்கீடு.

பொருளாதார அடிப்படையில் ஏன் கொடுக்கக்கூடாது?
பண உதவி செய்யும் போது தான் பொருளாதாரம் அடிப்படையாக இருக்க வேண்டும். கல்வி, வேலை இவற்றிற்கு பொருளாதாரம் அடிப்படையில்ல. பொருளாதார நிலை மாறக் கூடியது அது அடிப்படையாக வராது.

எவ்வளவு காலத்திற்கு இடஒதுக்கீடு?
ஏற்றத்தாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறதோ அவ்வளவு காலத்திற்கு

இடஒதுக்கீடு சாதியை நிலைநிறுத்தாதா?
இது சாதியை ஒழிப்பதற்குப் பயன் படுமே அன்றி வளர்க்காது. அரசியல்வாதிகள் தான் தவறாக சாதி உணர்வை வளர்க்கப்பயன்படுத்துகின்றனர். இடஒதுக்கீடு மூலம் மேல்நிலைக்கு வருபவர்கள் எளிதில் சாதிமறுப்பு மணம் புரிகின்றனர். அதன்வழி சாதி ஒழிகிறது.

தனியார் துறை இடஒதுக்கீடு வேண்டும் இடஒதுக்கீடு கேட்டுபலரும் போராடுகிறார்கள்!
தகுதியுள்ளவர் போராட்டம் சரியானது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டி எல்லோரும் போராடி வெற்றிபெற்றால் நலிந்த பிரிவு மக்கள் விரைவாய் மேல் எழவும், அதன் வழி சாதி ஒழியவும் வாய்ப்புக் கிடைக்கும்

 - @மஞ்சை வசந்தன் https://www.facebook.com/manjaivasanthan

படியுங்கள்! பரப்புங்கள்!......

No comments:

Post a Comment