அரசியல்

Monday, August 17, 2015

நெற்றிக்குறிகள் இடுவது நல்லதா?


குங்குமம், திருநீறு, நாமம் போன்றவை மூடநம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால், தற்போது இவற்றிற்கு அறிவியல் விளக்கம் அளிக்க சில மோசடிப் பேர்வழிகள் புறப்பட்டிருக்கிறார்கள்.

 குங்குமம் என்பது குருதிக்குறியீட்டின் தொடர்ச்சி என்று எனது முகநூலில் விளக்கியுள்ளேன். 

திருநீறு என்பது சாணத்தைச் சாம்பலாக்கிப் பூசிக்கொள்வது.
நாமம். வண்கட்டியை குழைத்து இட்டுக் கொள்வது.

 சைவர்கள் தங்களது அடையாளக் குறியீடாக திருநீறு பூசினர். வைணவர்கள் நாமம் இட்டனர். இன்றைக்கு அரசியல் கட்சிகள் தங்களுக்கு அடையாளம் வைத்துள்வது போலத்தான் இதுவும்.

 திருநீறு செய்ய சாணம் கிடைக்காததால் காகிதக் கூழைக் கொண்டு தற்போது செய்து தோல் நோய் வருவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்..

 புகழ்பெற்ற தோல்நோய் மருத்துவர்கள், குங்குமம், திருநீறு, நாமம், ஸ்டிக்கர் பொட்டு போன்றவற்றை வைக்க வேண்டாம் என்று அடிக்கடி கூறி அவை பலபத்திரிக்கைகளிடம் கட்டுரையாக அடிக்கடி வருகின்றன். அப்படியிருக்க முட்டாள் செயல்களுக்கு அறிவியல் முலாம் பூச முற்படுவது அயோக்கியத் தனமாகும்.

 குங்குமம் கிருமி போக்கும் என்கிறார். போக்காது கிருமிதான் வரும் வேண்டுமானால் மருத்துவரைக் கேளுங்கள்.

 குங்குமம் இல்லாத நெற்றியில் மூதேவி வருவாளாம். குங்குமம் அணிந்தால் மூதேவி ஓடிவிடுவாளாம். குங்குமம் இல்லா நெற்றிகள் உலகத்தில் பல நூறு கோடி. அத்தனை நெற்றியிலும் ஒரு மூதேவி எப்படி செல்வாள். அட முட்டாளே!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment