அரசியல்

Saturday, July 4, 2015

வட்டப் பரப்பு காண வழியை முதலில் சொன்னவர் தமிழர்!

 வட்டப் பரப்பு காண வழி 
முதலில் சொன்னவர் தமிழர்!

                                                               - மஞ்சை வசந்தன்

 வட்டத்தின் பரப்பளவு πr2 என்பது தற்காலத்தில் கணிதச் சூத்திரமாக  பயன்படுத்துகின்றனர். இச்சூத்திரம் சொல்லப்படுவதற்கு சில ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, கணக்கதிகாரம் என்னும் நூலில் பாடல்வடிவில், அதற்கான வழியைப் பதிவு செய்துள்ளனர் தமிழர்கள்.

வட்டத்தரை கொண்டு விட்டத் தரைதாக்கச்
சட்டெனத் தோன்றும் குழி

                                                    -  (கணக்கதிகாரம் 46)

இதன் பொருள்:

வட்டத்தரை என்பது சுற்றளவில் பாதி
விட்டத்தரை = விட்டத்தில் பாதி
சுற்றளவில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்க பரப்பளவு கிடைக்கும் என்றனர்.

எடுத்துக்காட்டு:

விட்டம்: 14; வட்டம்: 44

விட்டத்தில் அரை = ஆரம்(r) = 7

r = 7
வட்டத்தில் அரை 44/2 = 22. 
22 X 7 = 154

வட்டத்தின் பரப்பு = 154

தற்கால சூத்திரப்படி வட்டத்தின் பரப்பு = π r2

=  22 / 7 X 7X7 = 154    


படியுங்கள் தமிழர் பெருமை பரப்புங்கள்.

நாளை இன்னொரு பெருமையுடன்.





_____

No comments:

Post a Comment