அரசியல்

Saturday, November 4, 2017

ஜெயமோகனுக்கு “சவுக்கடி’’ கொடுத்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!

ஜெயமோகனுக்கு “சவுக்கடி’’ கொடுத்த 
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!
======================
ஆதவன் தீட்சண்யா, ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து இடதுசாரி எழுத்தாளராய் அறியப்படுபவர். ஆழமான சிந்தனையாளர். அர்த்தமுள்ள எழுத்தாளர்.
இவரைப்பற்றி எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டற்கு,
“ஆதவன் தீட்சண்யாவை எழுத்தாளர் என்று பொருட்படுத்த முடியாது’’ என்று பதில் அளித்துள்ளார்.
அதற்கு ஆதவன் தீட்சண்யா,
“என்னையும் அவரைப்போன்ற எழுத்தாளர் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பெரிய அவமானம் எனக்கு? காலாகாலத்துக்கும் துரத்தும் அந்தத் தீராப்பழி எனக்கு நேராததற்கு மகிழ்ச்சிதான்!’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயமோகன் என்ன எழுத்தாளர்களுக்கு மிஷிமி முத்திரை வழங்கும் ஆளா?
ஒரு எழுத்தாளரிடம் மற்றொரு எழுத்தாளரைப் பற்றி கேட்கையில், மரபின் மாண்புகூட சிறிதும் இன்றி, மமதையில், மனதில் உள்ள வெறுப்பைக் கொட்டியுள்ளார் ஜெயமோகன்.
ஆர்.எஸ்.எஸ். மதவாத பாஸிஸ சித்தாந்தங்களை இளைய தலைமுறைக்கு தேன்தடவி தரும் மோசடிப் பேர்வழி ஜெயமோகன். மாற்றுச் சிந்தனையாளர்களை குறிப்பாக திராவிட இயக்க, மார்க்சிய சிந்தனையாளர்களை “ஒன்றுமில்லை’’ என்பதே இவரது பிறவித் தொழில்.
பெரியாரையே வைக்கம் வீரர் இல்லை என்றவர் இந்த ஜெயமோகன். அவருக்குப் பதில் தந்து நான் எழுதியதற்கு இதுவரை பதில் எழுத வக்கற்ற இவர் இன்னொரு எழுத்தாளரை ஒதுக்கித் தள்ளி உதாசீனப்படுத்துவது அற்பத்தனம்! அசல் அற்பத்தனம்!
அவருக்கு ஆதவன் தீட்சண்யா கொடுத்த பதிலே அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அதுவும் மானமுள்ள எழுத்தாளர், மாண்புள்ள எழுத்தாளர் என்பதற்கு அடையாளம்.
ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!

No comments:

Post a Comment