அரசியல்

Friday, November 17, 2017

எம்.ஜி.ஆர் மக்கள் தலைவர்! கமலும், இரஜினியும் இரசிகர்களின் தலைவர்கள்!

இந்த வேறுபாடு புரியாததாலேதான் கமலகாசன், இரஜினிகாந்த் போன்ற சினிமா நடிகர்கள் அரசியல் நுழைவு, ‘காற்றுள்ள போதே தூற்ற வேண்டும்’ என்ற முனைப்பேயன்றி வேறில்லை.

எம்ஜிஆர் தி.மு.கழகத்தோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு வளர்ந்து, திரையின் வழி, பொதுமக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். அவருடைய கொடையுள்ளமும், ஏழைகளின் மீதான பற்றும் அவரை அந்த இடத்தில் அமர்த்தின.

எம்ஜிஆரின் செல்வாக்கால் வந்த அ.தி.மு.க.வை அப்படியே கைப்பற்றிக் கொண்டதால்தான் ஜெயலலிதாவால் அரசியலில் வெல்ல முடிந்தது.

ஆனால், கமலும், இரஜினியையும் இந்த இரண்டு வகையிலும் வராதவர்கள் இரசிகர்களின ஆதரவை நம்பி அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள். கமலின் அண்ணன் சாருகாசன் மிகச் சரியாகச் சொல்கிறார். அதுதான் நடக்கும். பிரகாஷ் இராஜ் எதிலும் சரியாகக் கருத்து கூறுகிறார்.

கமல், இரஜினி என்ற இந்த இரு நடிகர்களுக்கும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தொண்டு அமைப்புகளை நிறுவி தொண்டு செய்ய வேண்டும்; ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை போராட்டங்கள் மூலம் நீக்க வேண்டும்; ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதைச் செய்யாது அரசியலுக்கு வருவது பதவியாசையேயன்றி வேறில்லை! 

தமிழக மக்கள் இனி மிகவும் விழிப்பாக இருப்பார்கள்!
===

No comments:

Post a Comment