அரசியல்

Sunday, August 6, 2017

காவிகளின் காட்டாட்சியைக் கண்டித்து கல்கி ஏடே காழ்ப்பைத் துப்புகிறது



- மஞ்சை வசந்தன்

“பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசியல் குழப்பங்களை உருவாக்கி, உட்கட்சிப் பூசல்களை ஊதிப் பெரிதாக்கி, அரியணை ஏறுவதற்கான அசுர முயற்சிகளைத் தொடர்ந்து செய்வதில் சாதனை படைத்து வருகிறது பாஜக., கோவா, மணிப்பூர், பீகார், இப்போது தமிழ்நாட்டிலும் ஒரு பக்கம் மிரட்டல்... இன்னொரு பக்கம் வளைத்தல் என இரட்டை வேடம் போடுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, ‘இந்த விழா மேடையில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது’ என்று பேசியிருக்கிறார். சட்டத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தமது மறைவால் தண்டனையிலிருந்து தப்பித்த ஒருவரின் பெயரை தேசப் பிரதமர் சொல்லி உருகுவதற்கு என்ன காரணம்? தமிழக ஆளும் கட்சியிடம் நல்ல பெயரைச் சம்பாதித்து, தமக்கே உரிய உத்திகளைப் பிரயோகித்து தந்திரமாக ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

நிலைகுலைய வைத்து அதன்மூலம் நிலைபெற நினைப்பதையே அரசியல் நெறியாகக் கொண்டால்... நாடெங்கும் தார்மீக ஜனநாயகத் தாமரை மலராது. தந்திர பூமியில் கள்ளிச் செடிகள்தான் வளரும்.” என்று கல்கி ஏடு கடுமையாக எழுதியுள்ளது.

மக்கள் விழிக்கப் போவது எப்போ? மக்கள் விரோத பிஜேபி ஆட்சிக்கு முடிவு வரும் அப்போ!

No comments:

Post a Comment