அரசியல்

Sunday, August 6, 2017

அ.இ.அ.தி.மு.க.வின் ஆயுள் பிஜேபி.யை எதிர்ப்பதில்தான் உள்ளது! ஆதரிப்பதில் அல்ல!


தப்பான முடிவில் செல்லும் தலைவர்களே, எச்சரிக்கை!

- மஞ்சை வசந்தன்

தாங்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ள மத்தியில் ஆளும் பிஜேபி.யுடன் ஒத்துப்போய்விட்டால் சிக்கவில்லை என்ற தவறான முடிவில், அஇஅதிமுக.வின் தலைவர்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மோடியின் முன் மண்டியிடுகின்றனர். இது மானக்கேடான ஈனச் செயல் என்பது மட்டுமல்ல; அது அஇஅதிமுக.வை வெகுவிரைவில் ஒழித்து இல்லாமல் செய்யும் செயலும் ஆகும்.

அரசியலில் சோதனைகள், இழப்பு, சிறைவாசம் என்று எல்லாம் இயல்பானவை. இவற்றிற்குப் பயப்படும் ஆள்கள் அரசியலுக்கே வரக்கூடாது. அஇஅதிமுக.வைப் பொறுத்தவரை அங்கு ஜெயலலிதா ஒருவர்தான் முதுகெலும்புள்ள ஒரே நபர் என்பது இப்போது விளங்கிவிட்டது.

இப்போது அதிமுக.விற்குத் தேவை ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடியோ அல்ல. சூடு, சொரணை, மானம், முதுகெலும்புள்ள, எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ள ஒரு தலைவர்தான்.

அப்படியொருவர் இல்லையென்றால் அஇஅதிமுக.வின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதே பொருள்.

அதிமுக.வின் வாழ்வு பிஜேபி.யை எதிர்த்து நின்று சாதிப்பதில்தான் உள்ளதே தவிர, மானம் இழந்து, மண்டியிடுவதில் இல்லை.

இதுவே நமது இறுதி எச்சரிக்கை! சூடு சொரணையுள்ள ஒருவர் கூடவா அஇஅதிமுக.வில் இல்லை. அப்படிப்பட்டவரைத் தலைவராகத் தேர்வு செய்வது ஒன்றே அஇஅதிமுக தொண்டர்களின் உடனடிக் கடமை. இல்லையென்றால் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்ல அக்கட்சியில் எவருக்கும் தகுதியில்லை!

தன்மான உணர்ச்சியோடு முடிவெடுக்க வேண்டியது ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டனின் கடமையாகும்.

No comments:

Post a Comment