அரசியல்

Tuesday, January 19, 2016

கோயில் சிலைகளில் கடவுள் இல்லை! கோல்வால்கர் கூறுகிறார்!


 
கோயில் சிலைகளில் கடவுள் இல்லை!
கோல்வால்கர் கூறுகிறார்!


 ஆச்சரியமா? ஆனால், உண்மை!

- மஞ்சை.வசந்தன்

 ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், பி.ஜே.பி. கட்சியினருக்கும் மூல குருவாக விளங்குபவர் கோல்வால்கர். அவரது சிந்தனைகள்தான் இவர்களுக்கு வழிகாட்டலும், சட்டமும் ஆகும். அப்படிப்பட்ட கோல்வால்கர்,
“மக்கள் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிலைகளையே எல்லாம் வல்ல கடவுள் என்ற கருதி வணங்குகின்றனர்; வேண்டுதல்கள் வைக்கின்றனர். இவர்கள் சொல்வதை அச்சிலை கேட்காது, பதில் சொல்லாது, சிரிக்காது, அழாது, எப்பதிலும் சொல்லாது.

 எங்களுக்குத் தேவை உயிருள்ள கடவுள்! இதுவே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் குறிக்கோள். அந்த உயிருள்ள கடவுள் “அகண்டபாரதம்!’’
(அகண்ட பாரதம் என்பது சட்டத்தை ஏற்காது; நாடாளுமன்றம், சட்டமன்றத்தை ஏற்காது; நீதித்துறையை ஏற்காது. இந்து தர்மமே அதன் நோக்கு, சட்டம், நீதி எல்லாம்.)

 _ ஆதாரம்: (Quoted by Anderson and Damle ibid. p.16 and “The Integral approach by M.S.Golwalkar and others”)

 ஆக, ஆர்.எஸ்.எஸ். உட்பட சங்பரிவார அமைப்புகள் மற்றும் பி.ஜே.பி.யினருக்கு கடவுள் நோக்கமல்ல. அவர்களுக்கு முக்கியம் இந்த மதத்தின் சனாதன தர்மங்கள்தான்.

 இந்து தர்மம் என்பது ஆரிய பார்ப்பன தர்மம்தான்.

 அதாவது, ஆரிய பார்ப்பனர் மட்டுமே உயர்ந்தவர். அவர்கள் மட்டுமே எல்லா சொத்துக்கும் உரியவர்கள். மற்றவர்கள் அவர்களின் அடிமைகள். பார்ப்பான் கொலை செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கூடாது. ஆரிய பார்ப்பான் மற்ற ஜாதிக்காரன் மனைவியை விரும்பினால் அதற்கு மற்ற ஜாதியான் பெருமையோடு சம்மதிக்க வேண்டும் என்பன போன்றவைதான் சனாதன தர்மம்.

 இப்படியொரு நிலையை உருவாக்கவே இந்த மதவாத கும்பல் துடியாய் துடிக்கிறது. இது புரியாத நம் இளைஞர்கள் வளர்ச்சியென்ற மோடியின் மோசடியில் மயங்கி, ஆட்சியைக் கொடுத்து அல்லல்படுகிறார்கள். அவர்கள் ஏழைகளுக்கு எதிரா காப்பரேட் கம்பெனிகளுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் சார்பான ஆட்சியை நடத்துகிறார்கள். இளைஞர்களே விழியுங்கள்! எழுங்கள்! எச்சரிக்கையாய் இனி செயல்படுங்கள்!

 சமூக நீதி, இடஒதுக்கீடு, ஏழைகள் முன்னேற்றம், விவசாயிகள் முன்னேற்றம், இளைஞர் நலன் போன்றவற்றை நிலைநிறுத்தும் வகையில் இனி ஆட்சியாளர்களை உருவாக்குங்கள். இளைஞர்கள் நினைத்தால் இயலாதது ஒன்றும் இல்லை!

No comments:

Post a Comment