அரசியல்

Saturday, June 27, 2015

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்! ஆண்டவர்கள் தமிழர்கள்! - 3

தொடர்ச்சி......

எகிப்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காட்டினோம்.

அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

“மிசைப்பட்டணம்” என்பதே அப்படி மாறியது. மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் ----->மெசப்பட்டோமியா என்று மாறியது.


இந்தியா, கிழகாசிய நாடுகளில் முழுமையாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை அடுத்து பார்ப்போம்.

- மஞ்சை வசந்தன்

தொடர்புடையவை :  

No comments:

Post a Comment