அரசியல்

Thursday, February 23, 2017

ஊடகங்களின் யோக்கியதை இதுதானா?

அரசியல் தலைவர்களை துளைத்துத் துளைத்து கேள்வி கேட்கிறீர்கள்?
ஜக்கி வாசுதேவின் மோசடிகள் பற்றி ஏன் கேள்விகளை எழுப்பவில்லை? விவாதங்களை நடத்தவில்லை?
காட்டை சட்டவிரோதமாக வளைத்து பல கொடுமைகளைச் செய்யும் அவர் பற்றி ஏன் செய்திகள் வருவதில்லை?
கொலைக் குற்றவாளி, ஆக்கிரமிப்பாளர் என்பதோடு சிறுவர் வதை, கட்டணக் கொள்ளை, முறையான இரசீது இன்மை என்று ஆதாரபூர்வமாய் அவருக்கு எதிராய் சாட்சிகள், சான்றுகள் இருக்க ஏன் அவைபற்றி விவாதிப்பதில்லை; கண்டிக்கவில்லை?
7 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்றவன் தாய் தந்தை பற்றி ஏன் எந்த ஊடகமும் எழுதவில்லை? அந்தக் கொடியவனுக்கு ஜாமீன் பெற முயலும் அவர்களும் குற்றவாளிகளே!
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை டேரா அடித்து காட்டிய தொலைக்காட்சிகள், இறுதிநாள் நடந்த குப்பத்து வன்முறையை ஏன் பெரிதாய்க் காட்டவில்லை?
சங்கராச்சாரி கொலைக் குற்றங்களை கண்டுகொள்ளாமல் விடுவது என்ன ஊடக தர்மம்?
கேடிச் சாமியார் ஒருவர் கோடிக்கணக்கில் கணக்கின்றிச் சுரண்டி, பொது இடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்து, உரிய அனுமதியின்றி கட்டடங்கள் கட்டி, மாபெரும் சிலை வைத்து கவர்ச்சி மோசடி செய்யும்போது அதற்கு இந்திய நாட்டின் பிரதமரே வந்து ஆதரவு தருவதை ஏன் ஊடகங்கள் கண்டிக்கவில்லை?
ஊடகங்கள் கண்டித்தால் பிரதமர் வருவாரா?
வளைத்து வளைத்து கேட்கும் பாண்டேக்கள் வாலைச் சுருட்டி வாய்மூடி நிற்பது ஏன்?
கார்பரேட் சாமியார்களின் மோசடிக்கு, கார்பரேட் தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும், கார்ப்பரேட் ஏவலாள் பிரதமரும் என்பதாலா? அப்படியென்றால் நியாயம் பேச உங்களுக்கு ஏது யோக்கியதை?
- மஞ்ஞை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment