வாய் ருசியில் மயங்கி
வாழ்வைத்தொலைக்காதீர்கள்!
----------------------------------------------
பிராய்லர்கோழி பருமனாக வளரவும், எடை அதிகமாகவும் அதற்கு ஹார்மோன் மற்றும் ஊக்கமருந்துகளும், ஆன்ட்டி பயாடிக் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.
இந்தக் கோழியின் கறியைத்தான் நாம் சாப்பிடுகிறோம். ருசியாக இருக்கிறது, மென்மையாக இருக்கிறது என்பதால் விரும்பிச் சாப்பிடுகிறோம்.
ஆனால், இக்கோழிக்கறியைச் சாப்பிடுவதால் தான் எட்டுவயதிலே பெண்கள் வயதுக்கு வந்துவிடுகின்ற அவலநிலை வந்துள்ளது.
சினைப்பை நீர்க்கட்டிகள், மார்பகப்புற்றுநோய்கள் வரவும் இதுகாரணமாகிறது. ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன.
ஒருமுறை நாம் சாப்பிடும் கோழிக்கறியில் 6 ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரையிலுள்ள கேடு உள்ளது. ஒரு வருடத்திற்கு 100 முறை சாப்பிட்டால் 600 மாத்திரை சாப்பிட்டகேடு வரும். என்கிறது ஆய்வு.
இதனால், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வருகிறது. ஆண், பெண் இருபாலருக்குக்கும் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருகிறது.
நாட்டுக்கோழி, மீன் நிறைய சாப்பிடலாம். ஆட்டுக்கறி அளவோடு சாப்பிடலாம்.
உணவு ருசிக்காகமட்டுமல்ல உடல் நலத்துக்காக என்பதை ஆழமாக மனதில் கொள்ள வேண்டும்!
குழந்தைகளுக்கு மீன் கொடுங்கள் கோழி வேண்டாம்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!
No comments:
Post a Comment