நாம் உறங்கும்போது திடீரென நம்மை யாரோ அமுக்கிப் பிடிப்பது போலவும், நம்மால் புரள முடியாமல் பேச முடியாமல் தவிப்பது போலவும் ஒரு நிலை வரும். இது எல்லோருக்கும் எப்போதாவது ஒரு முறை வரும்.
எனக்கும் இதுபோன்ற அனுபவம் சில முறை வந்ததுண்டு.
இவ்வாறு வருவது பேய் அமுக்குவது என்று பலரால் நம்பப்படுகிறது. அமுக்குறா பேய் என்று அதற்குப் பெயர் வைத்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.
நம் உடலில் சில நேரங்களில் இரத்த ஓட்டம் திடீரென தடைப்படும்போது தற்காலிகமாக அப்படியொரு நிலை ஏற்படும்.
சற்று நேரத்தில் உடல் பழைய நிலைக்கு வந்துவிடும். இதுதான் உண்மையான காரணம். மற்றபடி அமுக்குப் பேய் என்பதெல்லாம் அசல் மூடநம்பிக்கையாகும்.
No comments:
Post a Comment