பாரதிராஜாவின் தமிழர் பற்று உள்நோக்கம் உடையது.
பாரதிராஜா தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுள்ளவர் . ஆனால் அதற்கான களப்பணி தொடர்ந்து நிகழ்த்தப்படவேண்டும். தூக்கத்தில் எழுந்தவன் பினாத்துவதுபோல பினாத்தினால் அது கேலிக்குரியதாகும்.
நடிகர் சங்கத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் (ஓரிரு நாள்கள் உள்ள நிலையில்) தமிழர்களுக்கே வாக்குப்போடு என்பது, குறுக்கே புகுந்து குழப்பம் ஏற்படுத்தி தான் விரும்புகின்றவர்களுக்கு சாதகத்தை உருவாக்கும் சூழ்ச்சியாகும்.
உண்மையிலேயே தமிழர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருக்குமானால், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டபோதே இரு அணியினரையும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் உண்மையான தமிழர் பற்றின் அடையாளம்!
தமிழர்களுக்கே வாக்களிக்கச் சொல்லி 2016 தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்றால் அது சரியாக இருக்கும்.
முதலில் ஆரியபார்ப்பனர்களை இவர் தமிழர் என்று ஏற்கிறாரா அதை உறுதியாக தெரிவித்துவிட்டு தமிழர் பற்றி பேசவேண்டும்?
யார் தமிழர் விளக்க வேண்டும்!
தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு, தமிழர்களை மட்டுமே அதில் உறுப்பினர்களாக்கிவிட்டு அதன்பின் தமிழர் பற்றி பேசவேண்டும். உறுப்பினராய் இருப்போர் பதவிக்கு வருவது தவறு என்பது தப்பு.
இத்தேர்தல் நிர்வாகச் சீர்கேடு குறித்து, முதலில் அது சரி செய்யப்படட்டும். அதன் பின் தமிழர் அமைப்பாக அது மாறட்டும். அதன் பின் தமிழர்கள் மட்டுமே பதவிக்கு வந்து விடுவர். இதுதான் சரியாக இருக்கமுடியும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan
No comments:
Post a Comment