நான்கு வேதங்களையும் நானே படைத்தேன்!
- கிருஷ்ணன்
நான்கு வருணங்களை படைத்தது கடவுள் கிருஷ்ணன் என்றால், அமெரிக்காவில், இரஷ்யாவில் மற்ற நாடுகளில் நான்கு வருணம் ஏன் இல்லை?
கடவுள் என்றால் உலகம் முழுமைக்குமா? அல்லது இந்தியாவுக்கு மட்டுமா?
இந்தியாவுக்குமட்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுளா?
உண்மையென்றால் இப்படி உளறல் வருமா? நான்கு வருணத்தையும் உருவாக்கியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் தான் என்பது புரியவில்லையா?
###கேள்வி தொடரும்..............
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan
This comment has been removed by the author.
ReplyDelete//////// நான்கு வருணங்களை படைத்தது கடவுள் கிருஷ்ணன் என்றால், அமெரிக்காவில், இரஷ்யாவில் மற்ற நாடுகளில் நான்கு வருணம் ஏன் இல்லை?///////////////
ReplyDeleteவர்ணம் என்பது ஒருவனது பிறப்பின் அடிப்படையில் வரவில்லை என்கிறது வேத இலக்கியம். உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶ: ।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் ॥ 4-13॥
'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து நான்கு வகையான சமுதாய நிலைகள் (வர்ணம்), என்னால் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' - பகவத் கீதையில் (4.13)
வர்ணம் என்பது ஜாதி அல்ல. ஜாதி வேறு, வர்ணம் என்பது வேறு. வர்ணம் என்பது ஒரு சமுதாய நிலை. அவ்வளவு தான்.
உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் இந்த நால்வகை பிரிவினர்களும் உள்ளனர் என்பதை ஆராய்வோம்.
* நிறுவனத்தின் கொள்கைகளையும் படைப்புகளையும் வடிவமைக்கக்கூடிய புத்திசாலிகள் ஒரு பிரிவினர், இவர்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பர், இவர்களை பிராமணர்களுடன் ஒப்பிடலாம்.
* நிறுவனத்தினை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர், இவர்களை சத்திரியர்களுடன் ஒப்பிடலாம்.
* நிறுவனத்தின் படைப்புகளை வெளியில் சென்று விளம்பரம் செய்து வியாபாரம் செய்பவர்கள் மூன்றாம் வகையினர், இவர்களை வைசியர்களுடன் ஒப்பிடலாம்.
* நிறுவனத்தின் படைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் நான்காம் வகையினராகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களாகவும் உள்ளனர், இவர்களை சூத்திரர்களுடன் ஒப்பிடலாம்.
இப்போது சொல்லுங்கள் இந்த நால்வகை பிரிவினர்கள் இல்லாமல் உலகம் இயங்குதல் சாத்தியமா என்று.பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லையே?