அரசியல்

Wednesday, October 14, 2015

இளைஞர்களே எச்சரிக்கை!.

இளைஞர்களே எச்சரிக்கை!...............


 இதயம், சிறுநீரகம், ஈரல், கண் என்று எல்லா உறுப்புகளையும் அழிக்கும் சர்க்கரை நோய்!

 மற்ற நோய்கள் உடலில் ஒவ்வொரு உறுப்பைப் பாதிக்கும். ஆனால், சர்க்கரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

 குறிப்பாக ஆண்மை இழக்கச் செய்யும்.

## வராமல் தடுப்பது எப்படி? ##

 பரம்பரையில் வருவதாயினும், நம் செயல்பாட்டால் வருவதாயினும் சர்க்கரை நோயை கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றினால் வராமல் தடுக்கலாம்.

 1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங் கற்கண்டு பயன்படுத்துதல்.
2. சோற்றைக் குறைத்து காய்கறி பழங்களை அதிகம் உண்ணுதல்.
3. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தினம் சாப்பிடுதல்.
4. பாகற்காய் வாரம் மூன்று நாள் எடுத்தல்.
5. நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிடுதல்.
6. முள்ளங்கி தவிர மற்ற கிழங்குகளைத் தவிர்த்தல்.
7. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
8. நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தல்.
9. கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
10. பாக்கட் உணவுகளைத் தவிர்த்தல். சுவைக்காக உண்ணாது நலத்திற்காய் உண்ணுதல்.

 இளமை முதல் இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் சர்க்கரை சாப்பிடுவதால் வருவதல்ல. கணையம் பாதிக்கப்படுவதால் வருவது.

 சர்க்கரை நோயாளிகள்தான் இனிப்பைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் அளவோடு இனிப்பு உண்ணலாம்.

 ## சர்க்கரை நோய் வந்த பின்:##

மேற்கண்டவற்றைப் பின்பற்றுவதோடு,

 நாவல் விதைப்பொடி, சிறுகுறிஞ்சான் இலைப்பொடி இவற்றை மருத்துவர் கூறும் அளவிற்கு எடுத்துக்கொள்ளுதல்.

 சுறுசுறுப்பான நடைப்பயிற்சி.
மென்மையான செருப்பு அணிதல்.
எல்லா உறுப்புகளையும் சோதித்தல்.

 மருத்துவர் வழங்கும் மருந்துகளைத் தவறாது சாப்பிடுதல்.
மனதை மகிழ்ச்சியாக வைத்திருத்தல்.

 இவற்றைச் செய்தால் சர்க்கரை நோய் பற்றி பயப்பட வேண்டாம்.

அலட்சியப்படுத்தினால்தான் ஆபத்தில் முடியும். முன்னெச்சரிக்கையோடு வாழ்ந்தால் இந்நோயால் பாதிப்பு வரவே வராது.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment