காஞ்சிப் பெரியவர் எனப்படும் காலஞ்சென்ற சங்கராச்சாரி எங்கு சென்றாலும் மனிதர்கள் தூக்க, பல்லக்கில் அமர்ந்து செல்வார். அதுபோல் பல்லக்கில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார்.
மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும் இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.
அவ்வளவுதான் பல்லக்கை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் சங்கராச்சாரி. பெரியார் ஏதோ சொல்கிறார்; சொல்லிவிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்! என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.
இல்லை; அவர் (பெரியார்) சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்தப் பல்லக்கு வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன் என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்தே சென்றார்.
(ஆதாரம்: சக்தி விகடனின் பொறுப்பாசிரியர் திரு.ரவி பிரகாஷ் எழுதியது.)
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
FOLLOW : https://www.facebook.com/manjaivasanthan
No comments:
Post a Comment