100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்
மதவாத அரசுக்கு எதிராகக் கண்டனம்!
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்!
மதவாத அரசுக்கு எதிராகக் கண்டனம்!
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்!
மதசார்பின்மை இல்லையேல்
மக்கள் எழுச்சி என்னும் அணுகுண்டு வெடிக்கும்!
எச்சரித்துள்ளனர்.
-------------------------------------------------------------
கருத்துச் சுதந்திரம் இல்லை, முற்போக்கு எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். மாட்டுகறியைச் சொல்லி மனிதனைக் கொல்லும் கொடுமை! எங்கே செல்கிறது நாடு! என முதன்மையான விஞ்ஞானிகள் கொதித்தெழுந்து கண்டித்துள்ளனர். குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையே பயங்கர விளைவு ஏற்படும் எச்சரித்துள்ளனர்!
எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்களுக்கு அடுத்து விஞ்ஞானிக்கும் வீறுகொண்டு எழுந்துவிட்டனர்.
இளைஞர்களே, மாணவர்களே எப்போது நீங்கள் எழப்போகிறீர்கள்! எதிர்க்கப் போகிறீர்கள்! இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருப்பது இளைஞர்களுக்கு அழகா!
நாட்டில் நிலவும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க நீங்களல்லவா முதலில் களம் இறங்க வேண்டும்?
இளைஞர்களே எழுங்கள்! ஒன்றுசேருங்கள்!
மதவெறியை, ஜாதிவெறியை, மாட்டுவெறியை, ஒற்றைக் கலாச்சார வேட்கையை ஒழிக்கும் வரைப் போராடுங்கள்!
இளைஞர் எழுச்சியே எல்லாவற்றிற்கும் தீர்வு!
இல்லையேல் இந்தியாவின் எதிர்காலம் மோதலும், சாதலுமாய் மாறும்! அந்நிலையைத் தவிர்க்க இளைஞர்களால் மட்டுமே முடியும்! புறப்படுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment